\
Jason Sanjay
Jason SanjaySigma

’Sigma’ வெளியானதும் விஜய் மகன் என்ற பேச்சு மாறுமா? ஜேசன் சஞ்சய் சொன்னது என்ன?

விஜய் மகன் என்ற அடையாளத்திலிருந்து ‘Directed by Jason Sanjay’ என்ற புதிய அடையாள மாற்றம் குறித்து ஜேசன் சஞ்சய் பேசியுள்ளார்.
Published on: 
Summary

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகனாக இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், ‘Sigma’ மூலம் தன் சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புவதாக கூறுகிறார். குடும்பப் பாரம்பரியத்தை மறுக்காமல், படைப்பின் தரம் மூலமே தன்னை மதிப்பிட வேண்டும் என வலியுறுத்துகிறார். படம் தொடங்கி சில நிமிடங்களில் ரசிகர்கள் குடும்பப் பின்னணியை விட இயக்குநராக அவரை கவனிப்பார்கள் என நம்புகிறார்.

செய்தியாளர் - M.மீரா

தமிழக முதலமைச்சரின் விஜய்யின் மகன் என்ற அடையாளத்துடன் திரையுலகில் அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். தனது திரைப்படப் பயணத்தில் குடும்பப் பின்னணி குறித்த எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் இருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இருப்பினும், தனது முதல் படமான ‘Sigma’ மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜேசன் சஞ்சய்யிடம், ரசிகர்கள் அவரை தமிழக முதலமைச்சரின் மகனாகவா, சூப்பர் ஸ்டார் விஜய்யின் மகனாகவா அல்லது இயக்குநர் ஜேசன் சஞ்சய்யாகவா எப்படி பார்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், தனது குடும்பத்தின் அடையாளத்தை மறுக்க முடியாது என்று கூறினார். தான் உருவாக்கும் படைப்பின் மூலமாக தனக்கான இடத்தைப் பிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எனது குடும்பத்தின் அடையாளம் எப்போதும் இருக்கும். அதே நேரத்தில், நான் எனது சொந்த உலகத்தில் எனது படத்தை உருவாக்கி வருகிறேன். திரையுலகில் எனது சொந்த அடையாளத்தை உருவாக்குவதும், எனது பார்வையை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுமே எனது நோக்கம் என்றும் அவர் கூறினார்.

மேலும், ‘Sigma’ படத்தை ரசிகர்கள் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தனது குடும்ப அடையாளத்தை விட படத்தின் மீதே அவர்களின் கவனம் செல்லும் என்று ஜேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படம் தொடங்கி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ‘Directed by Jason Sanjay’ யின் ஒரு திரைப்படமாகவே அதை பார்ப்பார்கள். படத்திற்கு கிடைக்கும் விமர்சனங்கள் நேர்மறையாக இருந்தாலும், எதிர்மறையாக இருந்தாலும், அந்தப் படைப்புதான் நான் யார் என்பதை சொல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றி மற்றும் அனுபவத்தை பயன்படுத்தி தனது இயக்குநர் பயணத்தை தொடர்ந்து வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யை இயக்க வேண்டும் என்ற ஆசை

தனது தந்தை விஜய்யின் நகைச்சுவை உணர்வும், இயல்பாகவும் குழந்தைத்தனமான உற்சாகத்துடனும் இருக்கும் தனிப்பட்ட பக்கமும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுடன் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்களில் நடிப்பதை குறைத்துவிட்டதாக ஜேசன் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால், விஜய்யின் அந்த இயல்பான மற்றும் ரசிகர்களுக்கு நெருக்கமான நடிப்பை வெளிக்கொண்டு வர விரும்புவதாகவும் அவர் கூறினார்.

Jason Sanjay
ஆணாதிக்கம், பாலினப் பாகுபாடு.. ‘டோரதி’ பேசும் அரசியல் என்ன? | Dorothy Review | Karthik Subbaraj
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com