‘ஏய் இந்தாம்மா..’ திரும்பிவரும் ஆதிகுணசேகரன்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன? காத்திருக்கும் சர்ப்ரைஸ்

‘யார் வந்தாலும் மாரிமுத்துவை Replace பண்ண முடியாது’ எனும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து.

எதிர்நீச்சல் நாடகத்தில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் மூலம், பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து. இவர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஜி மாரிமுத்து
ஜி மாரிமுத்து PT

இதையடுத்து யார் அடுத்த ஆதி குணசேகரன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ‘யார் வந்தாலும் மாரிமுத்துவை Replace பண்ண முடியாது’ எனும் அளவுக்கு அவரும் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருந்தார். அவரது மறைவு பலரையும் கவலையுற செய்த நிலையில், இந்தச் சூழ்நிலையை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் எதிர்நீச்சல் சீரியல் நடிகரும் இயக்குநருமான திருச்செல்வம்.

எதிர்நீச்சல்
Ethirneechal Serial | அடுத்த ஆதி குணசேகரன் யார்? இயக்குநர் திருச்செல்வம் கொடுத்த Twist!

பொதுவாக ஒரு நடிகர் இல்லையென்றால், உடனே இவருக்கு பதில் இவரென போட்டு ரீப்ளேஸ்மெண்ட் செய்யும் இந்த காலகட்டத்தில், மாரிமுத்துவுக்கு நிகர் மாரிமுத்துவே என்பதுபோல கதையையே அவருக்காக மாற்றியுள்ளார் இயக்குநர் திருச்செல்வம்.

இயக்குநர் திருச்செல்வம்
இயக்குநர் திருச்செல்வம்

மாரிமுத்து மறைந்து இரு வாரங்கள் ஆகிவிட்டபோதிலும், ஓரிரு தினங்களுக்கு முன்புவரை மாரிமுத்துவின் பழைய காட்சிகளை எடிட்டிங்கில் மேட்ச் செய்து வந்த இயக்குநர், தற்போது சீரியலில் ஆதிகுணசேகரன் காணாமல் போய்விட்டார் என்றும் சொத்துக்களை எல்லாம் உறவினர்களுக்கு எழுதிவைத்துவிட்டார் என்றும் கதைக்களத்தை அமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆதிகுணசேகரனுக்கு ஆதிபகவான் என ஒரு அண்ணன் இருக்கிறார் என்றும், அவர் இனி வருவாரென்றும் சொல்லப்படுகிறது. இதில் நேற்றைய எபிசோடில், வீட்டிலுள்ள மருமகள்கள் கதாபாத்திரம் ‘ஏதோ புதுநாடகம் போடறார், எப்படியும் திரும்பி வந்துடுவாரு’ என சொல்ல, அதற்கு அப்பத்தா கதாபாத்திரம் ‘இந்தமுறையும் குணசேகரன் திரும்பி வருவான், ஆனா வரப்போற குணசேகரன், ரொம்ப ஆபத்தான ஆளா இருக்கப்போறான்’ என பதிலளிப்பதுபோல வசனம் எழுதப்பட்டுள்ளது. இது, ஆதி குணசேகரனுக்கு ரீப்ளேஸ்மெண்ட் வரப்போகிறதோ என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.

வேல ராமமூர்த்தி
வேல ராமமூர்த்தி
எதிர்நீச்சல்
“இந்தாம்மா, ஏய்..” - உதவி இயக்குநர் to நடிகர்.. மறைந்த மாரிமுத்து கடந்து வந்த 30 வருட சினிமா பயணம்!

‘ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடிப்பார்’ என ஏற்கெனவே தகவல் பரவியதை சுட்டிக்காட்டி பலரும் ‘ஒருவேளை அவர்தான் வரப்போகிறாரோ’ என் கேட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன? மீண்டும் ஆதி குணசேகரனா வேல ராமமூர்த்தி வருவாரா, இல்ல அவர் அண்ணனா வருவாரா? ஆதி குணசேகரனா யார் வந்தா சரியா இருக்குமென நினைக்கிறீங்க? கமெண்ட் பண்ணுங்க!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com