’முடிச்சுடலாமா..’ சில மணி நேரத்திலேயே விற்றுத்தீர்ந்த ’கூலி’ டிக்கெட்டுகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பின்னணி இசை அனிருத் என ஒரு மாஸ் காம்போவில் உருவாகியிருக்கும் படம் ’கூலி’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பல திரை சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்திற்கான புக்கிங் தற்போது ஓப்பனாகி உள்ள நிலையில், புக்கிங்கில் சாதனை படைத்துவருகிறது கூலி.
சில மணி நேரத்திலேயே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்..
கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சிறந்த ஸ்க்ரீன்பிளே படமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், படத்தின் டீசரில் கதை குறித்த எந்த பிளாட்டையும் ஓப்பன் செய்யாமல் ரஜினியின் ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷன் காட்சியோடு முடித்திருந்தனர். அதுவே ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், படம் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்டு 14-ம் தேதி வெளியாகவிருக்கும் கூலி படத்திற்கான தியேட்டர் புக்கிங் தற்போது ஓப்பனாகியுள்ளது. முதலில் கேரளா தியேட்டர் புக்கிங்கை தொடர்ந்து தமிழ்நாடு புக்கிங் ஓப்பனாகியுள்ளது. டிக்கெட் ஓப்பனிங் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே முதல் நாளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டுள்ளன.
பரட்டையின் தீ+தளபதி ஆட்டம் கூலியில் தெறிக்கப்போகிறது என்பது நிச்சயம்.