ஜெயிலர் 2-ன் 5 நாள் வசூல் எவ்வளவு..? பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை புரட்டிப்போடும் ரஜினி!
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 உலகளவில் 6 நாட்களில் 500 கோடி வசூலித்து, பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை மாற்றியமைத்துள்ளது. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படம், பழைய ரஜினி படங்களின் மெருகூட்டலாக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. 2023ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், மோகன்லால், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, ஜாக்கி ஷரஃப், ரித்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகிபாபு, சுராஜ், நமோநாரயணா உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம், நேர்மறையான விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. காமெடி + ஆக்சன் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஜெயிலர் 2, குடும்பமாக பார்த்து மகிழும் வகையில் பழைய ரஜினிபடம் போல உருவாக்கப்பட்டுள்ளது. இது வசூலிலும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
வெளியாகியிருக்கும் தகவலின் படி, நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் 480 கோடிவரை வசூலித்துள்ளது. சாக்னில்க் வலைதள அப்டேட்டின் படி, 5 நாள் முடிவில் உலகளவில் 477.75 கோடி ரூபாயை ஜெயிலர் 2 வசூலித்திருப்பதாகவும், அதன் இந்தியாவின் மொத்த வசூல் ரூ.283.75 கோடியாகவும் இருக்கிறது. 2026ஆம் ஆண்டு வெளியாகி அதிக வசூல் செய்த திரைப்படமான ஜனநாயகனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ஜெயிலர் 2. ஞாயிற்று கிழமை டிக்கெட் புக்கிங்கை விட 10% திங்கள் கிழமை குறைந்திருந்ததால் வசூலிலும் சிறு தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்துவரும் சூலும், படம் மிகப்பெரிய வசூல் வெற்றியை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

