விஸ்வரூபம் -2 திரைப்பட பாடல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதால் அப்படத்தின் 2ம் பாகத்திற்கும் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், விஸ்வரூபம் 2 பட பாடல் வரிகள் விரைவில் டிவிட்டரில் வெளியிடப்படும். பாடல்களுக்கு இனிமையான இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு கமல்ஹாசன் நன்றி என அவர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 2ம் தேதி இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியானது.

