Sree Vishnu
Sree VishnuVishnu Vinyasam

படத்தை திருடி, தயாரிப்பாளரிடம் பணம் கறக்க முயற்சி! - தெலுங்கு சினிமாவில் பகீர் சம்பவம்

பேட்டிகளின் போது நடிகர் ஸ்ரீ விஷ்ணுவிடம் கேட்கப்பட்ட "படம் வெளியான பின்னர் அதற்கு பதில் அளிக்கிறேன்" என சொன்னார்.
Published on

தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர் ஸ்ரீ விஷ்ணு. இவர் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் `Vishnu Vinyasam'. முன்னர் இப்படம் வெளியாகும் இதே தேதியில் ஸ்ரீ விஷ்ணு நடித்த இன்னொரு படமான `Mrithyunjay' படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டு `Vishnu Vinyasam' பிப்ரவரி 27 வெளியாக, `Mrithyunjay' மார்ச் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதலில் `Mrithyunjay' படம் தான் பிப்ரவரி 27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென `Vishnu Vinyasam' பிப்ரவரி 27க்கு கொண்டு வந்து `Mrithyunjay' படம் ஏன் தள்ளி வைக்கப்பட்டது என பேட்டிகளின் போது நடிகர் ஸ்ரீ விஷ்ணுவிடம் கேட்கப்பட "படம் வெளியான பின்னர் அதற்கு பதில் அளிக்கிறேன்" என சொன்னார். நேற்று படம் வெளியாகிவிட்ட நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று படகுழுவினர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டனர்.

Vishnu Vinyasam
Vishnu Vinyasam
Sree Vishnu
`சேயோன்' முருகனுக்கு எதிரான கதையா? - சிவக்குமார் முருகேசன் விளக்கம் | Seyon | Sivakumar Murugesan

இதில் பேசிய ஸ்ரீ விஷ்ணு "எங்கள் படத்தின்  (Vishnu Vinyasam) எடுத்தவரையிலான காட்சிகள் அனைத்தும் கடந்த டிசம்பர் மாதம் மர்மமான முறையில் லீக் ஆனது. அதை கைவசப்படுத்திய ப்ளாக்மெய்லர்ஸ் பணம் கேட்டு மிரட்டினார்கள். ஆனால் உறுதியாக இருந்த தயாரிப்பாளர் படப்பிடிப்பை வேகப்படுத்தி, ப்ளாக்மெய்லர்ஸ் படத்தை இணையத்தில் வெளியிடும் முன்னர், அவசரமாக படத்தை முடித்து வெளியிட துணை நின்றார். இதெல்லாம் நடந்த பின்னர் தான் இதற்கு முன்பும் ஒரு பெரிய படத்திற்கு இதே விஷயம் நடந்துள்ளது என" எனப் பேசினார்.

இந்த சம்பவம் பற்றி தெலுங்கு சினிமா வட்டாரங்கள் சொல்லும்போது `Vishnu Vinyasam', அதுவரைக்கும் எடுத்த வரையிலான படத்தின் காட்சிகளை படக்குழுவை சேர்ந்த ஒருவர் தான் ப்ளாக்மெய்லர்ஸ்க்கு கொடுத்திருக்கிறார் எனவும், அதனால் 20 நாட்கள் எடுக்கப்பட வேண்டிய மீதி காட்சிகளை 7 நாட்களில் இரவு பகலாக எடுத்து அவசர அவசரமாக நேற்று படத்தை வெளியிட்டுள்ளார்கள் என சொல்லப்படுகிறது. 

Sree Vishnu
"எனக்கு கல்லூரி வாழ்க்கை கிடைக்கவில்லை..." - ஏக்கத்தோடு சொன்ன தனுஷ் | Dhanush

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com