அடேங்கப்பா! கோலிவுட்டில் நாளைக்கு மட்டும் இத்தனை அப்டேட்டா?

விஷால் நடிப்பில் ரத்னம், விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர், ஜிவு பிரகாஷ் நடிப்பில் ரெபெல் போன்ற படங்களின் அப்டேட்கள் நாளை வெளியாகின்றன.
விஜய் ஆண்டனி, விஷால், ஜிவி பிரகாஷ்
விஜய் ஆண்டனி, விஷால், ஜிவி பிரகாஷ்pt web

ஜிவி பிரகாஷ் - ரெபெல்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் நிகேஷ் இயக்கியுள்ள திரைப்படம் ரெபெல். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான வெளியீட்டுத் தேதி அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி - ஹிட்லர்

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ஹிட்லர். இத்திரைப்படத்தினை இயக்குநர் தனா இயக்கியுள்ளார். ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ள இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

விவேக் மெர்வின் இசையமைக்கும் இத்திரைப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் பாடலை நாளை இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுகிறார். தப்பாசு என்ற பெயரிடப்பட்டுள்ள பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.

விஷால் - ரத்னம்

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் ரத்னம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்திற்கான முக்கியமான அப்டேட் நாளை காலை 10.30 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com