ஆட்சியரின் அலட்சியம்? கைக்குழந்தையுடன் காத்திருந்த மக்கள்; பிளாஸ்டி பாட்டிலில் தேநீர் குடித்த அவலம்!

திருவாரூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பயனாளிகள் பிளாஸடிக் பாட்டிலில் தேநீர் அருந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 கைக் குழந்தையுடன் காத்திருந்த மக்கள்
கைக் குழந்தையுடன் காத்திருந்த மக்கள்file image

திருவாரூர் மாவட்டம் தேவர் கண்ட நல்லூரில் இன்று வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்  நிகழ்ச்சியைக் காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ துவங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் 12:30 மணியைக் கடந்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் யாரும் வராததால் மேடை காலியாக காணப்பட்டது.

ஆட்சியருக்காக 
காத்திருந்த மக்கள்
ஆட்சியருக்காக காத்திருந்த மக்கள்

இந்தநிலையில் விழாவிற்கு வந்திருந்த பயனாளிகளும், பொதுமக்களும் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தவித்து வந்துள்ளனர். ஒரு சில பயனாளிகள் தங்களுடைய கைக் குழந்தையோடு காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கைக் குழந்தையுடன் காத்திருந்த மக்கள்
காரில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி; பரபரப்பில் ஆழ்ந்த கேரளா..20 மணி நேரத்தில் முடிந்த தேடுதல் ஆபரேஷன்!
பிளாஸ்டிக் பாட்டிலில் தேநீர் அருந்தும் பெண்கள்
பிளாஸ்டிக் பாட்டிலில் தேநீர் அருந்தும் பெண்கள்

மேலும் அங்கு வந்திருந்த பயனாளிகளுக்கு தேநீர் வழக்கப்பட்டுள்ளது. ஆனால் தேநீர் குடிப்பதற்கான கப் வழங்கப்படவில்லை. பயனாளிகளுக்கு குடிப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வழக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் பாட்டிலை வைத்து பயனாளிகள் தேநீரை பிடித்து குடித்த அவல சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.

 கைக் குழந்தையுடன் காத்திருந்த மக்கள்
ராமநாதபுரம்: பேருந்து வசதி இல்லாததால் தினமும் 10 கி.மீ. நடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள்!

தமிழக அரசு நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முனைப்பில் மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து தேநீர் அருந்திய சம்பவம் விவாத பொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com