ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த வில்லன் நடிகர்!

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த வில்லன் நடிகர்!

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த வில்லன் நடிகர்!
Published on

ரஜினிகாந்த் நடித்துவரும் ’அண்ணாத்த படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் ஜெகபதி பாபு. இந்த தகவலை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ், மீனா,குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ’அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், ஷூட்டிங்கில் வில்லன் நடிகர் ஜெகபதி பாபு இணைந்திருக்கிறார்.

இவர், சிவா இயக்கிய ’விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாகவும், விஜய்யின் ‘பைரவா’ படத்திலும் வில்லனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ரஜினியுடன் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ’லிங்கா’ படத்தில் நடித்தவர், மீண்டும் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com