நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்; சோகத்தில் திரைத்துறை!

நெருப்பு கண்களுடன், வில்லத்தன பார்வை மற்றும் பயமுறுத்தும் சிரிப்பை கொண்டு வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக மிரட்டிய டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜிweb

தெனாவெட்டான முகபாவம், வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்வற்றில் ஒரு தன்னிச்சையான வசீகரம்... இதெல்லாம்தான் டேனியல் பாலாஜி.

வேட்டையாடு விளையாடு படத்தில் ஆங்கிலம் கலந்து ஒரு நக்கலான தோரணையில் கமல்ஹாசனை மிரட்டும் காட்சியில் டேனியல் பாலாஜியின் நடிப்புத்திறன் அவ்வளவு அபாரமானதாக இருக்கும். சமீபத்தில்கூட ஒரு இண்டர்வியூவில் அந்த டயலாக்கை அவர் பேச, அதை ரசிகர்கள் அதே ஆச்சர்யத்தோடு பகிர்ந்துவந்தனர்.

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

அதையும் தாண்டி காக்க காக்க திரைப்படத்தில் “நாங்க 4 பேரு எங்களுக்கு பயமில்ல” என சொல்லும் சூர்யாவின் போலீஸ் நண்பர்கள் கும்பலில் ஸ்ரீகாந்த் கேரக்டராகவும், பொல்லாதவன் திரைப்படத்தில் தன்னுடைய பகைக்காக அண்ணனையே கொல்லும் தம்பி ரவியாகவும், வடசென்னை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களுக்கு விருப்பமான ஒரு வில்லன் நடிகராக டேனியல் பாலாஜி மாறியிருந்தார். ராதிகா நடிப்பில் வெளியான சித்தி தொடர்தான், டேனியல் பாலாஜியை முதன்முதலில் கேமராமுன் நிறுத்தியது.

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

சமீபத்தில் விஜய்யின் பைரவா, பிகில் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார் பாலாஜி. அடுத்ததாக வெற்றிமாறனின் வடசென்னை 2-விலும் முக்கிய ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

டேனியல் பாலாஜி
சுருள்முடி, வன்மம், அச்சம், குரோதம், கூடவே பயம்! திமிரான ‘பொல்லாதவன்’ ரவியை மறக்க முடியுமா?

மாரடைப்பால் திடீர் மரணம்!

இந்நிலையில் டேனியல் பாலாஜி, நேற்று (மார்ச் 29) இரவு திடீரென உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே டேனியல் பாலாஜி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொட்டிவாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேனியல் பாலாஜி
”உங்கள் இதயத்தை பலமாக வைத்திருங்கள்” - மாரடைப்பு ஏற்பட்டதாக சுஷ்மிதா சென் அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com