இயக்குநராக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்!

விஜய்யின் மகன் ஜேசன் விஜய் இயக்குநராக அறிமுகமாகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜய்யின் மகன். ஜேசன் சஞ்சய் இயக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.

லைகா நிறுவனம் இது குறித்து, “நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். சினிமாத்துறையில் இயக்குநராக ஜேசன் சஞ்சய் வெற்றி பெற வாழ்த்துகிறோம்” என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சஞ்சய்யை, The Lion king படத்தின் சிம்பா கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு லைகா நிறுவனம் ட்வீட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com