\
தனது பைக்கிற்கு பிறந்த தேதியைக் கேட்டு வாங்கிய விஜய் சேதுபதி

தனது பைக்கிற்கு பிறந்த தேதியைக் கேட்டு வாங்கிய விஜய் சேதுபதி

தனது பைக்கிற்கு பிறந்த தேதியைக் கேட்டு வாங்கிய விஜய் சேதுபதி
Published on

ரூ.4 லட்சம் கொடுத்து நடிகர் விஜய் சேதுபதி புதிதாக வாங்கிய பி.எம்.டபுள்.யூ பைக்கிற்கு தனது பிறந்த தேதியை நம்பர் பிலேட் ஆக பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த கதாநாயகன்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அதன் வசனம் ட்ரெண்டாகியுள்ளது. அத்துடன் விஜய் சேதுபதியின் திருநங்கை வேடமும் பேசு பொருளாகியுள்ளது. இதேபோன்று விஜய் சேதுபதி புதிதாக வாங்கியுள்ள பி.எம்.டபுள் பைக்-கும் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது. 

சொகுசுக் காரான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பைக்கான, ‘பிஎம்டபுள்யூ ஜி310ஜிஎஸ்’ (BMW G310GS) பைக்கை விஜய் சேதுபதி வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.4 லட்சம் ஆகும். தனது ஓய்வு நேரங்களில் மனதிற்கு நிம்மதி தரும் வகையில் பயணம் மேற்கொள்ள விஜய் சேதுபதி இந்த பைக்கை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த பைக்கின் நம்பரை, தனது பிறந்த வருடமான 1979-ஐ குறிக்கும் வகையில் அவர் வாங்கியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com