\
விஜய் சேதுபதி-அமலா பால் இணையும் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின்!

விஜய் சேதுபதி-அமலா பால் இணையும் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின்!

விஜய் சேதுபதி-அமலா பால் இணையும் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின்!
Published on

நடிகர் விஜய் சேதுபதி, அமலா பால் இணைந்து நடிக்கும் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின் ஒருவர் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. ரோகாந்த், இயக்குநர் ஜனநாதனிடம் பேராண்மை, புறம்போக்கு படங்களில் பணிபுரிந்தவர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, இசக்கி துரை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். அவர் ஜோடியாக இரண்டு பேர் நடிக்கின்றனர். ஒருவர் அமலா பால். இன்னொரு ஹீரோயினாக வெளிநாட்டு நடிகை நடிக்கிறார். 

படத்துக்காக 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான தேவாலய அரங்கு வடிவமைக்கப்பட இருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த படத்தின் கதை, சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்னையை பேசுவதாக இயக்குனர் தெரிவித்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பழனியில் இன்று தொடங்கியது. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். முருகனைப் பற்றிய காவடி பாடலுடன் படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com