\
‘விஜய்64’ படத்தில் விஜய்சேதுபதி - நண்பனா ? வில்லனா ?

‘விஜய்64’ படத்தில் விஜய்சேதுபதி - நண்பனா ? வில்லனா ?

‘விஜய்64’ படத்தில் விஜய்சேதுபதி - நண்பனா ? வில்லனா ?
Published on

‘பிகில்’ படத்திற்கு அடுத்து விஜய் நடிக்கவுள்ள திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இவர் தமிழில் ‘மாநகரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அத்துடன் ‘பிகில்’ படத்துடன் தீபாவளியன்று வெளியாகவுள்ள நடிகர் கார்த்திக்கின் ‘கைதி’ திரைப்படத்தையும் இவர் தான் இயக்கிவுள்ளார். இவர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் விஜய் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. அவர் நண்பனாக நடிக்கிறாரா ? அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா ? என்பது இனிவரும் அப்டேட்களில் தெரியவரும். ஹீரோவாக வலம் வரும் நிலையிலும், ரஜினியின் ‘பேட்ட’, சிரஞ்சீவியின் ‘சைரா’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com