\
விஜய் சேதுபதி ஒரு நடிகர், அவரை கட்டுப்படுத்தக் கூடாது : நடிகை ராதிகா

விஜய் சேதுபதி ஒரு நடிகர், அவரை கட்டுப்படுத்தக் கூடாது : நடிகை ராதிகா

விஜய் சேதுபதி ஒரு நடிகர், அவரை கட்டுப்படுத்தக் கூடாது : நடிகை ராதிகா
Published on: 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதிக்கு அரசியல் சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் நடிகை ராதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்தப் படத்தில், இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ராதிகா முத்தையா முரளிதரன் பயிற்சியாளராக உள்ள சன்ரைசர்ஸ் அணி குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பாமல், விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என சொல்வது எப்படி சரியாகும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விஜய் சேதுபதி ஒரு நடிகர், அவரை கட்டுப்படுத்தக் கூடாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ராதிகா நானும் ரெளடிதான், தர்மதுரை உள்ளிட்டப் படங்களில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் சேதுபதியின் பெயரிடப்படாத படத்திலும்  நடித்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com