விக்ரம், பொன்னியின் செல்வன் பாணியில் விஜய், த்ரிஷாவை வைத்து லியோ படக்குழு போடும் ’மாஸ்டர்’ ப்ளான்!

லியோ திரைப்படம் குறித்து நாளும் புதுப் புது தகவல்கள் வெளியாகும் நிலையில், படத்தின் ப்ரொமோசனில் நடிகர் விஜய்யை வைத்து பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
vijay, Trisha on leo
vijay, Trisha on leoleo team

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. ‘லியோ’ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கடந்த மே மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Lokesh-Vijay
Lokesh-Vijay

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரைலர் என வரிசையாக வெளியாகும். ஒவ்வொறு அறிவிப்பிற்கும் அப்டேட் என்ற பெயரில் தனி அறிவிப்பு ஒன்றும் இருக்கும். இதைத்தாண்டி திரைப்படம் வெளியாகும் சூழலில் அதன் நடிகர்கள் பங்கேற்கும் பேட்டி நிகழ்ச்சிகள், திரைப்படத்திற்கு வைக்கப்படும் இசை வெளியீட்டு விழா, டீசர் வெளியீட்டு விழா இவை அனைத்தும் தனி. இத்தனைகளையும் கடந்துதான் ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது. அதோடு இயக்குநர் நெல்சன் தனது படங்களில் படத்தின் அறிவிப்புகளை வெளியிட புது பாணியில் ப்ரோமோசன் செய்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் அதே பாணியை மேலும் சில திரைப்படங்கள் பின்பற்றிய நிகழ்வுகளும் நடந்தது.

பட ப்ரோமோசன் விழாக்களில் சில நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றபோதும் மற்ற விஷயங்கள் அனைத்து திரைப்படங்களுக்கும் ஒன்று போல் தான் இருக்கும். கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் ப்ரோமோசன் விழாக்களில் கமல்ஹாசன் அதிகளவில் கலந்து கொண்டார். கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்திற்கு செய்த ப்ரோமோசன் குறித்து திரைப் பிரபலங்கள் பலரும் வரவேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

ப்ரமோசன் விழாக்களில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து தயாரிப்பாளர்களிடம் எப்போதும் ஒரு அதிருப்தி வெளிப்படும். கமல்ஹாசன் விக்ரமிற்கு செய்த ப்ரோமோசன் காலத்தில் அந்த அதிருப்தி அதிகமானது. அது குறித்தான பேச்சும் திரைவட்டாரங்களில் பரவலாக இருந்தது. அதே நேரத்தில் ப்ரோமோசன் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வருவதையும் மறுக்க முடியாது.

பொன்னியின் செல்வன் 1-விக்ரம்
பொன்னியின் செல்வன் 1-விக்ரம்Movie poster

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரு பாகங்களுக்கும் படக்குழுவினர் பல இடங்களுக்கு விமானங்களில் சென்று பிரச்சாரம் செய்தனர். ப்ரொமோசன் நிகழ்வுகளில் தாங்கள் கலந்து கொள்வது குறித்து ட்விட்டரில் கதாபாத்திரங்களில் பெயர்களில் பேசிக்கொண்டதும் மக்களிடையே வரவேற்பு பெற்றது. ப்ரோமோசன் நிகழ்ச்சி திரைப்படம் வெளியாவதை மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு கருவியாக இருந்தாலும், ப்ரோமோசன் நிகழ்வுகளில் திரைப்படத்தில் பங்காற்றியவர்கள் அப்படத்தினை குறித்து நிகழ்வுகளில் பேசும் கருத்துகளும் மக்களுக்கு அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நடிகர் விஜய் தன் ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய இசை வெளியீட்டு விழாக்களை நடத்தி அதில் கலந்து கொண்டு ரசிகர்களை கடந்து பலரது கவனத்தையும் தன் பக்கம் சில நாட்களுக்கு வைத்திருப்பவர். இந்நிலையில் லியோ திரைப்படத்திற்காக விஜய் மலேசியாவிற்கு சென்று அங்கு லியோ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார் என்றும் அதனைத் தொடர்ந்து துபாயிலும் லியோ திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக துபாய் பயணத்திற்கும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Trisha
Vijay Trisha

லியோ திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் எவ்வித சிறு நிகழ்வுகளையும் தவற விட்டு விடக்கூடாது என்பதில் படக்குழு உறுதியாக இருப்பதால் விஜய் மற்றும் திரிஷாவை மலேசியாவிற்கு அழைத்து செல்ல லியோ திரைப்படக்குழு தீவிரமாக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com