Vijay Divorce Rumors Who Is His Wife Sangeetha?
விஜய், சங்கீதாஎக்ஸ் தளம்

விவாகரத்து மனு | விஜய்க்கு நெருக்கடி கொடுத்த மனைவி.. யார் இந்த சங்கீதா?

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
Published on

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சங்கீதா யார் என்பது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ’நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது தனக்கு 2021 ஏப்ரல் முதல் தெரியவந்ததாகவும், இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். விஜய் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று, குறிப்பிட்ட நடிகையுடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நடிகை இந்த வெளியூர் பயணங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தது எனக்கும் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர், இது விவாகரத்து வழக்கு என்பதால் இந்த வழக்கை செங்கல்பட்டு முதன்மை குடும்ப நல நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்பு விசாரணைக்கு வருகிறது. விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அன்றைய தினம் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயின் மனைவி சங்கீதா யார் என்கிற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய், சங்கீதா
விஜய், சங்கீதாஎக்ஸ் தளம்

லண்டன் தொழிலதிபரான சொர்ணலிங்கத்தின் மகளே, இந்த சங்கீதா ஆவார். இவர், இலங்கை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர். 1996ஆம் ஆண்டு விஜயின் ’பூவே உனக்காக’ திரைப்படத்தைப் பார்த்தபிறகு, அவரைச் சந்திக்க சென்னைக்குப் புறப்பட்டு வந்தார். அதன்பிறகு விஜய் - சங்கீதா ஆகியோரின் நட்பு தொடர்ந்தது. தொடர்ந்து, இருவீட்டிலும் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த ஜோடி 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டது. திருமணத்திற்குப் பிறகு சங்கீதா, விஜயின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. தவிர, அவர் நடித்த சில படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மகன் ஜேசன் சஞ்சய், 2009ஆம் ஆண்டு வெளியான ’வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் தனது தந்தையுடன் தோன்றினார், மேலும், ’சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அவர்களின் மகள் திவ்யா சாஷா, 2016ஆம் ஆண்டு வெளியான ’தெறி’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தார். பேட்மிண்டன் வீராங்கனையாகவும் உள்ளார்.

Vijay Divorce Rumors Who Is His Wife Sangeetha?
விவாகரத்து கோரிய விஜயின் மனைவி.. மனுவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com