TVK Leader Vijays Wife Seeks Divorce and Levels Multiple Allegations
விஜய், சங்கீதாஎக்ஸ் தளம்

விவாகரத்து கோரிய விஜயின் மனைவி.. மனுவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
Published on

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக உள்ளார். அவர், வரும் தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்சிப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடிகர் விஜய் - சங்கீதா திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் சஞ்சய், கனடாவில் திரைப்படத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பெண் குழந்தையான திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக, சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. இருப்பினும், அவர் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக அங்கேயே தங்கியிருப்பதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில்தான் சங்கீதா விவாகரத்து மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ’நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது தனக்கு 2021 ஏப்ரல் முதல் தெரியவந்ததாகவும், இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அதில், ’திருமணத்துக்கு மீறிய உறவை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்தபோதிலும் அவர் அந்த உறவை தொடர்ந்தார். இது எனக்குள் மனவேதனையை ஏற்படுத்தியது. செப்டம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022க்கு இடையில், வழக்கறிஞர் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீவு காண முயன்றும் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

TVK Leader Vijays Wife Seeks Divorce and Levels Multiple Allegations
divorcex page

விஜய் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று, குறிப்பிட்ட நடிகையுடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நடிகை இந்த வெளியூர் பயணங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தது எனக்கும் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. தேவையற்ற விளம்பரத்தைத் தவிர்க்கவும், அனைத்து தரப்பினரின் நற்பெயரைப் பாதுகாக்கவும், தற்போது நடிகையின் பெயரை வெளியிடவில்லை’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர், இது விவாகரத்து வழக்கு என்பதால் இந்த வழக்கை செங்கல்பட்டு முதன்மை குடும்ப நல நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்பு விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அன்றைய தினம் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 24ஆம் தேதி அன்று செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து கோரியும் ஜீவனாம்சம் கேட்டும் மனு தாக்கல் செய்தார். சங்கீதாவின் விவாகரத்து மனு, நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

TVK Leader Vijays Wife Seeks Divorce and Levels Multiple Allegations
‘நயினார் அடிப்படை அறிவைக்கூட இழந்துவிட்டார்..’ விஜயை மோசமாக விமர்சித்ததற்கு நாஞ்சில் பதிலடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com