Vijay Deverakonda, Rashmika Mandanna
Vijay Deverakonda, Rashmika MandannaMarriage

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம், நெட்ஃப்ளிக்ஸில் ஆவணப்படம்? | Vijay Devarakonda | Rashmika

2024ல் இருவருமே தங்கள் துணையின் பெயரை குறிப்பிடாமல், ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக மறைமுகமாக தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் கடந்தாண்டு அக்டோபர் மாதம்  இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது எனவும் சொல்லப்பட்டது.
Published on
Summary

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தானில் நடைபெறவுள்ளதாகவும், இந்த நிகழ்வு நெட்ஃப்ளிக்ஸில் ஆவணப்படமாக வெளியிடப்படும் என தகவல் பரவியுள்ளது. இருவரும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக வதந்திகள் இருந்த நிலையில், இப்போது திருமணம் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. மறுபுறம், கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இந்த ஜோடி பற்றிய செய்திதான் இப்போதைய பரபரப்பாக மாறியிருக்கிறது.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் `கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். சில வருடங்களாகவே அவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் பொதுவெளியில் இருவரும் அதை பற்றி எந்த உறுதியான தகவலையும் பகிரவில்லை. 2024ல் இருவருமே தங்கள் துணையின் பெயரை குறிப்பிடாமல், ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக மறைமுகமாக தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் கடந்தாண்டு அக்டோபர் மாதம்  இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Marriage
Marriage
Vijay Deverakonda, Rashmika Mandanna
"பிப்ரவரி 14 எனக்கு கல்யாணமா?" மிருணாள் பதில் | Mrunal Thakur | Dhanush

இந்த நிலையில் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெற உள்ளதாகவும், இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், இரு குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் எனவும் தகவல் பரவிவருகிறது.

மேலும் இந்த திருமணத்தை ஆவணப்படமாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர் என்றும், இதற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.60 கோடி வழங்க உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன் ஹன்சிகா - சோஹில் திருமணம் `Hansika's Love Shaadi Drama' என்ற பெயரில் ஹாட்ஸ்டாரிலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் `Beyond The Fairy Tale' என நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Vijay Deverakonda, Rashmika Mandanna
"பிப்ரவரி 14 எனக்கு கல்யாணமா?" மிருணாள் பதில் | Mrunal Thakur | Dhanush

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com