Mrunal Thakur Marriage
Mrunal ThakurMarriage

"பிப்ரவரி 14 எனக்கு கல்யாணமா?" மிருணாள் பதில் | Mrunal Thakur | Dhanush

இதுவரை தனுஷ் - மிருணாள் இணைந்து எந்தப் படமும் நடிக்கவில்லை என்றாலும், சில பொது இடங்களில் இவர்கள் சந்தித்துள்ளனர். தனுஷும் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நட்சத்திரம் என்பதால், நடிகை மிருணாள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்கப்பட்டு, அதில் கலந்து கொண்டார்.
Published on
Summary

பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தனுஷுடன் காதல் வதந்திகள் பரவிய நிலையில், பிப்ரவரி 14ம் தேதி திருமணம் என கூறப்பட்டது. ஆனால், மிருணாள், இது உண்மையல்ல எனவும், திருமணம் பற்றிய தகவல்களை தானே அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர். `Hello Nandan' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், `Love Sonia', `Super 30', `Jersey' என தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்தார். தெலுங்கில் `Sita Ramam', `Hi Nanna' போன்ற படங்கள் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார். சில மாதங்களாகவே இவருக்கும் நடிகர் தனுஷுக்கும் காதல் என பல பாலிவுட் ஊடகங்கள் செய்திகளை பதிவிட்டு வந்தனர்.

இதுவரை தனுஷ் - மிருணாள் இணைந்து எந்தப் படமும் நடிக்கவில்லை என்றாலும், சில பொது இடங்களில் இவர்கள் சந்தித்துள்ளனர். தனுஷும் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நட்சத்திரம் என்பதால், நடிகை மிருணாள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்கப்பட்டு, அதில் கலந்து கொண்டார். மேலும் மிருணாள் நடித்த `Son of Sardaar 2' படத்தின் சிறப்பு திரையிடலிலும் கலந்து கொண்டார். இதை எல்லாம் வைத்து தனுஷுக்கும், மிருணாள் தாக்கூருக்கும் இடையில் காதல் எனவும் இருவருக்கும் பிப்ரவரி 14ம் தேதி திருமணம் எனவும் பல தகவல்கள் பரவின.

Dhanush, Mrunal Thakur
Dhanush, Mrunal Thakur
Mrunal Thakur Marriage
"சூர்யா உடன் முதல் படம் நடித்தது ஸ்பெஷல்..." - மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் குறித்து த்ரிஷா | Trisha

தற்போது மிருணாள் நடித்துள்ள Do Deewane Seher Mein படம் பிப்ரவரி 20ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு சில பேட்டிகளை அளித்து வருகிறார் மிருணாள். அப்படி அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணம் பற்றிய பேச்சு வர "யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் தேதியாக மாறப்போகிறது. சிலர் அவர்களாகவே எதையாவது பதிவிட்டு மிருணாள் தாகூர் இதை சொன்னார் என சொல்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. எனக்கு திருமணம் என்றால் அதனை கண்டிப்பாக அறிவிப்பேன், நான் மறைத்து வைக்க கூடிய ஆள் இல்லை." எனக் கூறியுள்ளார்.

Mrunal Thakur Marriage
"சூர்யா உடன் முதல் படம் நடித்தது ஸ்பெஷல்..." - மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் குறித்து த்ரிஷா | Trisha

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com