\
இந்தியில், வில்லனை காதலிக்கும் ஸ்ருதிஹாசன்!

இந்தியில், வில்லனை காதலிக்கும் ஸ்ருதிஹாசன்!

இந்தியில், வில்லனை காதலிக்கும் ஸ்ருதிஹாசன்!
Published on

தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ரவுண்ட் கட்டும் ஸ்ருதிஹாசனின் இப்போதைய கால்ஷீட், இந்திப் படத்துக்கு!

இயக்குனர் மகேஷ் மஞ்ரேக்கர் 12 வருடத்துக்குப் பிறகு இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி. கேங்ஸ்டர் படமான இதில் ஸ்ருதிக்கு சிறு நகரத்துப் பெண் கேரக்டர். வழக்கம் போல ஹீரோவின் மீது காதலில் விழுந்து, அவரை விரட்டி விரட்டிக் காதலிக்கும் கேரக்டர்தான் அவருக்கு. ஆனாலும், ’இது வழக்கமானதாக இருக்காது, வித்தியாசத்தைப் பார்க்கலாம்’ என்கிறது யூனிட்!

ஸ்ருதி விரட்டி விரட்டி காதலிக்கும் அந்த ஹீரோ, வித்யுத் ஜம்வால்! தமிழில், அஜீத்தின் ’பில்லா 2’, விஜய்யின் ’துப்பாக்கி’யில் வில்லனாக மிரட்டியவர். ’அஞ்சான்’ படத்தில் சூர்யாவின் உயிர் நண்பனாக வந்து பொசுக்கென்று உயிரை விடும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த வில்லனைதான் படத்தில் காதலிக்கிறார் ஸ்ருதி. 

(அம்மா சரிகா, இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கருடன் ஸ்ருதி)

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அவர், சோனல் சவுகான். மேலும் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com