நிஜமான கார் விபத்தா! பார்த்தாலே பதறுதே.. வைரல் ஆகும் அஜித் பட வீடியோ!

நிஜமான கார் விபத்தா! பார்த்தாலே பதறுதே.. வைரல் ஆகும் அஜித் பட வீடியோ!
அஜித்
அஜித்Twitter

நடிகர் அஜித்தின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் படத்தில் அஜித் உடன் த்ரிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பானது அஜர்பைஜானில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்ற வருடம் நவம்பர் மாதம் படப்பிடிப்பில் நடந்த ஒரு வீடியோவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித்
”ஹாய் செல்லம்..” - ஏப்.20ல் ரீ ரிலீஸ் ஆகிறது மெகாஹிட் அடித்த ‘கில்லி’ - ட்ரெய்லர் வெளியீடு

அதில் அஜீத் வேகமாக ஒரு காரை ஓட்ட அவரின் அருகில் ஆரவ் அமர்ந்திருக்கிறார். வேகமாக வந்த காரானது நிலைதடுமாறி ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறது. இந்த சீனில் அஜீத் டூப் எதுவும் இல்லாமல் நடித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் சந்திராவின் பதிவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். அதனால், இணையத்தில் வைரலாக இது பகிரப்பட்டு வருகிறது. முதலில் இது உண்மையான விபத்தா என்று சிலர் கேட்க, இல்லை இது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த வீடியோவை பதிவிட்டு அஜித்தை பலரும் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே வலிமை படத்தின் போது பைக் சாகசம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அதனால், அவருக்கு பைக், கார் இதெல்லாம் ஓட்ட தெரியுமா, தெரியாதா என கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com