”ஹாய் செல்லம்..” - ஏப்.20ல் ரீ ரிலீஸ் ஆகிறது மெகாஹிட் அடித்த ‘கில்லி’ - ட்ரெய்லர் வெளியீடு

ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலிஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்து வருகிறது.
கில்லி
கில்லிPT

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் மெகா சூப்பர் ஹிட்டான கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் வரும் 20 ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலிஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்து வருகிறது. சமீப காலமாக இத்தகைய படங்களின் எண்ணிக்கையும் அதற்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில், கில்லி திரைப்படத்தில் விஜயும் பிரகாஷ்ராஜும் போட்டிப்போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். தரணியின் இயக்கத்தில், வித்யாசாகரின் இசையில் 2004ல் வெளிவந்த கில்லி திரைப்படம் பாடல்களிலும் ஹிட் அடித்தது. வசூலை அள்ளிக்குவித்த இந்தப்படமானது மீண்டும் திரைக்கு வர இருப்பது ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏப்ரல் 20ம் தேதி படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், கில்லி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. முக்கியமான காட்சிகளுடன் தெறிக்கும் வசனங்களுடன் ட்ரெய்லர் உள்ளது. ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாகவும் ஓடி வருகிறது. அந்த வரிசையில் கில்லியும் சேருமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com