கடவுள் முருகனின் பெருமை பேசும் ’வெற்றிவேலா’ பக்தி ஆல்பம்: வெளியிட்ட சூர்யா!
பாடகர் க்ரிஷ் உருவாக்கியுள்ள ’வெற்றிவேலா’ பக்தி ஆல்பத்தை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்தசஷ்டிக் கவசம் குறித்து பேசிய பேச்சுக்கள் சர்ச்சையானது. இதனால், தமிழ் கடவுள் முருகனை எப்படி அவமதிக்கலாம்? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் பாடகரும் நடிகருமான க்ரிஷ் தற்போது முருகனை பெருமைப்படுத்தும் விதமாக ‘வெற்றிவேலா’ ஆல்பத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றையே பாடல் தலைப்புகளாக்கி ஆறு பாடல்களை பாடியும் இசையும் அவரே அமைத்துள்ளார்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவியும், இரண்டாது லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபுவும் ஏற்கனவே வெளியிட, பாடலின் ஆல்பத்தை இன்று நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். ’முருகன் என்றால் அழகுதான். ஆனால், முருகனின் பாடல்கள் எப்போதும் ஆக்ரோஷமாகவே உள்ளன. அதனால், சாந்தப்படுத்தும் விதமாக மெலோடியில் ஆல்பத்தை அமைத்தேன்” என்றிருக்கிறார் க்ரிஷ்.
இதையும் படிக்கலாமே...வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை!