சம்பவம் LOADING! அஜித்தின் அடுத்த இயக்குநர்? வெற்றிமாறன், P.S.மித்ரன், ஆதிக்.. விஷ்ணு-நீளும் லிஸ்ட்!

நடிகர் அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் குமார்
அஜித் குமார்pt web

துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் குமார் பைக் பயணம் மேற்கொண்டதால் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த சூழலில், சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்குமார், ஆதிக்
அஜித்குமார், ஆதிக்pt web

இந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித் குமார், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியானது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமாரை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தீவிர அஜித் ரசிகரான ஆதிக், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தபோது கூறிய கதை அஜித் குமாருக்கு பிடித்துப்போனதாக கூறப்பட்டது. இதையடுத்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் அஜித் வெற்றிமாறனோடு இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் விடுதலை 2 பாகம், சூர்யாவின் வாடிவாசல் என பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்துப் போனதாகவும் அவர் அடுத்து வெற்றிமாறனோடு இணையப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் எல்ரெட்குமார் அஜித்குமாரின் 63 ஆவது திரைப்படத்தையும் தயாரிக்கிறார். இவரே அஜித்குமார், வெற்றிமாறன் இணையும் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதேபோல் அஜித்தின் 65 ஆவது திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது.

மகிழ் திருமேனியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன், விஷ்ணுவர்தன் என வெரைட்டியான இயக்குநர்களோடு அஜித் இணைய இருப்பதாக தகவல் பரவும் நிலையில், அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com