அடுத்த ஆதிகுணசேகரன் வந்தாச்சு.. மாரிமுத்து இடத்துல யார் தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகரை சீரியல்குழு தேர்வு செய்துவிட்டதாக தெரிகிறது.
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல்file image

'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் சின்னத்திரையிலும் ஹிட் அடித்த நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் சினிமா வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக ஆதிகுணசேகரனை ஆதர்ச நாயகனாக கொண்டாடிய ரசிகர்களையும் சோகக்கடலில் மூழ்கச்செய்தது.

இந்நிலையில், மாரிமுத்துவின் மறைவைத் தொடர்ந்து, எதிர்நீச்சல் சீரியல் அவரின் பாத்திரத்தை ஏற்று நடிக்க பல நடிகர்களை சீரியல் குழுவினர் அணுகியதாக தெரிகிறது.

குறிப்பாக, பசுபதி, ராதாரவி, இளவரசு, ஆனந்த்ராஜ் மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதனிடையே, “நடிக்க அழைத்தார்கள்.. இன்னும் முடிவெடுக்கவில்லை” என்று கூறியிருந்தார் வேல ராமமூர்த்தி.

இந்த விவகாரத்தில், வேல ராமமூர்த்தி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், ஷூட்டிங் தொடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில், வேல ராமமூர்த்தியை ஆதி குணசேகரனாக பார்க்கலாம் என்றும் பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com