\
varalaxmi sarathkumar on childrens birth
வரலட்சுமி சரத்குமார்PT

”குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை..” - மனம் திறந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ், கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published on: 

நடிகையான வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை, திருமணம் செய்துகொண்ட நடிகை வரலட்சுமி, திருமணத்திற்குப் பிறகு தனது திரையுலகப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில், குழந்தை பற்றி அவர் பேசிய விஷயம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “எனக்குக் குழந்தைகள் வேண்டாம் என்பதை நான் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். இது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஏதேனும் ஓர் உடல்நிலை குறைபாடு காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது முற்றிலும் எனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு. எனது கணவர் நிக்கோலாயும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். இருவருமாக இணைந்தே இந்த முடிவை எடுத்தோம்.

PT web

அதேநேரத்தில், ஒரு குழந்தையைப் பெறுவதற்கு முன்பு, அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பிற்கு நீங்கள் தயாராக இல்லை என்றால், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்வதே சிறந்தது. அதுவும் ஒரு பொறுப்பான பெற்றோர் முடிவு என்று நான் நம்புகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார். மேலும், நிக்கோலாய் சச்தேவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஏற்கெனவே ஒரு மகள் உள்ளார். அவரைப் பற்றிக் குறிப்பிட்ட வரலட்சுமி, "அவரை நான் எனது சொந்த மகளாகவே கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

varalaxmi sarathkumar on childrens birth
"`TOXIC' டீசர் Superb ஆக இருந்தது" - வரலட்சுமி சரத்குமார் சொன்ன பதில் | Varalaxmi | Saraswathi
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com