Varalaxmi SarathKumar
Varalaxmi SarathKumarToxic

"`TOXIC' டீசர் Superb ஆக இருந்தது" - வரலட்சுமி சரத்குமார் சொன்ன பதில் | Varalaxmi | Saraswathi

பெண்கள் தலைமுறை தலைமுறையாக சம உரிமைக்காக போராடி வருகிறார்கள். இப்போது முழுமையாக சமத்துவம் வந்துவிட்டதா என்றால் இல்லை. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும், அதை நோக்கி செல்லும் பாதையை உருவாக்கி வருகிறது.
Published on

வரலட்சுமி சரத்குமார் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் `சரஸ்வதி'. தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 6ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட வரலட்சுமி பேசிய போது "ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறோம். நான் இவ்வளவு காலம் இங்கு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் தான், உங்கள் ஆதரவு தான். இப்போது இயக்குநர் என்ற ரூபத்தில் வந்திருக்கிறேன். இது மிக அழுத்தமான படம், பெண்கள் சார்ந்த படம். பெண்களை மையமாக கொண்டது என்றால் போரடிக்கும் படம் என்று இல்லை, இது மிக விறுவிறுப்பாக நகரும் படம். அதற்குள்ளும் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும். நான் பெண்கள் உரிமைக்கு ஆதரவாக இருப்பேன் என உங்களுக்கே தெரியும். இந்தப் படத்திலும் அது இருக்கும்.

Saraswathi
SaraswathiPt web

கோபி சார் என்னுடைய நண்பர், குரு. அவர் என்னை தெலுங்கில் மறு அறிமுகம் செய்தார். நான் இங்கு இருக்க ஒரே காரணம் நீங்கள் தான். எனக்கு மறுவாழ்வு கொடுத்தீர்கள் என்றே சொல்ல வேண்டும். அதற்கு எப்போதும் நன்றியுடன் இருக்கிறேன். இயக்குநராக பல அழுத்தங்களை சந்திப்பதால் கொஞ்சம் எமோஷனல் ஆகிறேன். இது உண்மையிலேயே நல்ல படம், அதை முடிந்த வரை விளம்பரப்படுத்த முயல்கிறோம். மேலும் இந்த துறையில் பெண்கள் வளரவும் உதவுங்கள். நான் எப்போதும் இவ்வளவு எமோஷனலாக மாட்டேன். எப்போதாவது நடக்கும் ஒன்று என்பதால், இது பரவாயில்லை. ஒரு பெண்ணாக பல போராட்டங்களை தாண்டித்தான் இந்த துறையில் நீடித்திருக்க முடியும். அதற்காகவே நான் போராடுகிறேன். இனி இன்னும் பல பெண்கள் இந்த துறைக்கு பல்வேறு திறமைகளுடன் வர வேண்டும். ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் இன்னும் அதிகமாக பேசுகிறேன். எனக்கு தந்த ஆதரவை போல இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்." என்றார்.

Varalaxmi SarathKumar
"சரி.. யாரு ஹீரோ?" வெளியானது ரெட்ரோ ஸ்டைல் ரஜினி கமல் ப்ரோமோ | KH x RK Reunion | Rajini | Kamal

கீது மோகன்தான் இயக்கியுள்ள `டாக்சிக்' பட டீசர் வெளியான போது, ஒரு பெண் இயக்குநர் ஏன் இப்படி எடுக்கிறார் என்ற விமர்சனம் வந்தது. பெண் இயக்குநர்கள் என்றால் இது போன்ற படங்கள் தான் செய்ய வேண்டும் என எல்லைகள் வகுக்கப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட, "பெண்கள் தலைமுறை தலைமுறையாக சம உரிமைக்காக போராடி வருகிறார்கள். இப்போது முழுமையாக சமத்துவம் வந்துவிட்டதா என்றால் இல்லை. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும், அதை நோக்கி செல்லும் பாதையை உருவாக்கி வருகிறது. `டாக்சிக்' டீசர் Superb ஆக இருந்தது. பெண்களை stereotype செய்யும் மனநிலை சமூகத்தில் இருந்து வருவதே. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சமூகம் பழக்கி வைத்திருக்கிறது. அதை உடைக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு பெண்ணும் அவரவர் துறைகளில் மிக சிறப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் எல்லாம் மாறும். பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்பட வேண்டும் என சொல்லி சொல்லி முன்னேற்றத்தை தடுத்துவிட்டனர். அந்த பயத்தை ஒருவர் உடைக்கும் போது பின்னால் வருபவர்கள் அந்த வழியை பின்பற்றுவார்கள்." என்றார் வரலட்சுமி சரத்குமார்.

Varalaxmi SarathKumar
"சரி.. யாரு ஹீரோ?" வெளியானது ரெட்ரோ ஸ்டைல் ரஜினி கமல் ப்ரோமோ | KH x RK Reunion | Rajini | Kamal

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com