\
“வலிமை மோஷன் போஸ்டரையாவது வெளியிடுங்கள்” - போனி கபூருக்கு ட்விட்டரில் ரசிகர்கள் கோரிக்கை

“வலிமை மோஷன் போஸ்டரையாவது வெளியிடுங்கள்” - போனி கபூருக்கு ட்விட்டரில் ரசிகர்கள் கோரிக்கை

“வலிமை மோஷன் போஸ்டரையாவது வெளியிடுங்கள்” - போனி கபூருக்கு ட்விட்டரில் ரசிகர்கள் கோரிக்கை
Published on: 

வலிமை படத்தின் மோஷன் போஸ்டரைக் கேட்டு, ValimaiMotionPoster என்ற பெயரில் ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தினை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகியப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கினார். இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை படத்தை தயாரித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம்தான், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடந்தது. அதில், அஜித் பைக் ரேசிங் காட்சிகளிலும் நடித்தார். தற்போது, ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஜனவரிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50வது பிறந்தநாளான மே 1 ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக படக்குழு உழைத்து வருவதாக தகவல் வெளியானது.

இதனிடையே நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் அப்டேட்கள், கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சனுடன் இணையும் அடுத்தப்படம், சூர்யா, கெளதம் மேனனுடன் இணையும் வெப் சிரீஸ் என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தன. இதனால், அஜித் ரசிகர்களும் வலிமை படம் தொடர்பான அப்டேட் கேட்டு ட்விட்டரில் ஹேஷ்டேக்குளை ட்ரெண்ட் செய்தனர்.

இதனிடையே, இது குறித்து அறிக்கை வெளியிட்ட அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா நடிகர் அஜித் மற்றும் படக்குழுவினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் வலிமை தொடர்பான அப்டேட் வரும் என அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் ரசிகர்கள்  ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து, அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் வலிமைப் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தநிலையில், அஜித் ரசிகர்கள் இப்படி ட்ரெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.