இறுதிகட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் 'வலிமை' படக்குழு
அஜித்தின் 'வலிமை' படக்குழுவினர் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை தொடர்ந்து அஜித் - ஹெச்.வினோத் - போனிகபூர் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'வலிமை'. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் ஒரு கோடி பார்வைகளை கடந்து உள்ளது.
இந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல 'வலிமை' படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
இதற்கான அனுமதி பெறும் வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. 'வலிமை' படத்தின் 95 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன, மீதமிருக்கும் 5 சதவீத காட்சிகளே தற்போது வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது.
அந்த வேலைகள் முடித்த பிறகு 'வலிமை' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படக்குழுவினர் சமீபத்தில் ஐதராபாத் சென்று நான்கு நாட்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
- செந்தில்ராஜா