’வலிமை’ அஜித் குடும்பப் புகைப்படம்’ - ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

’வலிமை’ அஜித் குடும்பப் புகைப்படம்’ - ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

’வலிமை’ அஜித் குடும்பப் புகைப்படம்’ - ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
Published on

’வலிமை’ படத்தில் அஜித் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதனை, அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

 மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த  ’நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. இப்படத்தினை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். 'நேர்கொண்ட பார்வை'-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்தது. 'ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தற்போது, ஹைதராபாத், ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடித்த படக்குழு சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றது. இம்மாத இறுதிக்குள் படத்தை முடித்து  அஜித்தின் 50-வது பிறந்தநாளான மே 1-ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறது.

விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களின் வெளியீடுகளும் அப்டேட்டுகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், வலிமை படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகாததால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகிறார்கள். ஆனால், அப்டேட்டுக்குப் பதில் அஜித் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள்தான் சமீபத்தில் வெளியாகி வந்தன.

இந்நிலையில், வலிமை படத்தில் தனது குடும்பத்தினருடன் அஜித் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அதில், அஜித்துக்கு அம்மாவாக நடிக்கும் சுமத்ரா அமர்ந்திருக்க அருகில் அஜித் உட்பட அமர்ந்திருக்கின்றனர். இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com