Vaazha 3 on cards after the huge success of Vaazha 2
Vipin DasVaazha 3

மிகப்பெரிய ஹிட்டான `வாழா 2'... உருவாகும் `வாழா 3' | Vaazha 3 | Vipin Das

10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் கிட்டத்தட்ட 170 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் பற்றி பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வந்த நிலையில் திரையாகும் அத்தனை காட்சிகளும் ஃபுல் ஆகிறது.
Published on

ஆனந்த் மேனன் இயக்கத்தில் விபின் தாஸ் எழுத்தில் உருவாகி 2024இல் வெளியான மலையாளப்படம் `வாழா'.  சிஜூ சன்னி, அமித் மோகன், ஜோமோன், அன்ஷித், அனுராஜ் எனப் பலரும் நடித்திருந்தனர். சில நண்பர்களது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை பேசி காமெடி + சென்டிமென்ட் படமாக பெரிய வரவேற்பை பெற்றது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு, இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனவே இப்படத்தின் எழுத்தாளர் விபின் தாஸ் இரண்டாம் பாகத்தின் கதையை எழுத, சவின் இப்படத்தை இயக்கினார். முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் இப்படத்திலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியானது. 

முதல் பாகத்தைவிட பல மடங்கு மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கிறது. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் கிட்டத்தட்ட 170 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் பற்றி பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வந்த நிலையில் திரையாகும் அத்தனை காட்சிகளும் ஃபுல் ஆகிறது. மேலும் இப்படத்தின் மூன்றாம் பாகம் இருக்கிறது என்ற தகவலையும், மூன்றாம் பாகம் வெளியானால் நன்றாக இருக்கும் எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். நேற்று மாலை இப்படத்தின் கதாசிரியர் விபின் தாஸ் `வாழா 3' வரும் என்பதை உணர்த்தும்படி ஒரு புகைப்படம் பகிர்ந்திருந்தார். இன்று அதிகாரப்பூர்வமாகவே `வாழா 3' அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரு பாகங்கள் ஆண்களின் கதையை பேசியதுபோல, இது பெண்களின் கதையை பேசும் படமாக உருவாக்க உள்ளது.

Vaazha 3 on cards after the huge success of Vaazha 2
கோலிவுடில் சிவராஜ்குமார்... கெஸ்ட் ரோல் இல்லை ஹீரோ! | Shiva Rajkumar

இதுகுறித்து  கதாசிரியர் விபின் தாஸ், "நாங்கள் கற்பனை செய்ததைவிட 'வாழா' பட வரிசை மிகப் பெரியதாக வளர்ந்துள்ளது. நீங்கள் எங்களுக்கு அளித்த அன்புக்கு நன்றி! சினிமாவுக்குப் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் நாங்கள் 'வாழா'வைத் தொடங்கினோம். அந்தப் பாரம்பரியத்தை எதிர்கால அத்தியாயங்கள் அனைத்திலும் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். நீங்கள் எழுத, இயக்க, நடிக்க அல்லது இசையமைக்க விரும்பினாலும், உங்களுக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும் ஒரே பட வரிசை இதுதான்.

விபின் தாஸ்
விபின் தாஸ்எக்ஸ் தளம்

தலைப்பும் பார்வையாளர்களும் எங்கள் நிலையான தூண்களாகத் தொடர்ந்தாலும், கேமராவுக்கு முன்னும் பின்னும் உள்ள முகங்களே எப்போதும் அடுத்த தலைமுறை சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும். உங்களின் அமோகமான வரவேற்பு மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், நாங்கள் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்: Vaazha 3 – Biopic of a Billion Girls. எப்போதும் போலவே, எனது இயக்கக் குழுவில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வரும் விஸ்வான் ஸ்ரீஜித்திடம் இயக்கப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு நீண்ட காத்திருப்பு என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அந்தக் காத்திருப்புக்கு ஏற்ற பலனை நிச்சயம் தருவோம் என்று உறுதியளிக்கிறோம்!" என அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com