நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் - விடுதலை 2 வெற்றிமாறன், விஜய் சேதுபதி
நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் - விடுதலை 2 வெற்றிமாறன், விஜய் சேதுபதிபுதிய தலைமுறை

“விடுதலை 2.. தோழர் வெற்றிமாறனின் அந்த கருத்தில் நான் வேறுபடுகிறேன்” - நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்!

இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் பங்கேற்று, நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
Published on

செய்தியாளர்: ரமேஷ்

இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. சென்னை நந்தனத்தில் உள்ள அவரில் இல்லத்தில் நடந்த இந்த விழாவில், நூலக திறப்பு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் பங்கேற்று, நல்லக்கண்ணுவின் இல்லத்தில் நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்புதிய தலைமுறை

நிகழ்ச்சியில் பேசிய நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ்,

சிவ பதத்தை எட்டியவர் நல்லக்கண்ணு.

“உடலில் எங்கு அடிப்பட்டாலும் கண்ணில்தான் நீர் வடியும்.. அது போல எங்கு ஒடுக்கம், அநீதி நடந்தாலும் அதை தட்டிக்கேட்கும் மாமனிதர் நல்லக்கண்ணு. கடைசி மனிதன் வரை அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பதுதான் பொது உடைமை. அன்பே சிவம் என்பார்கள். சிவமும் அன்பும் ஒன்றுதான். அன்பு இருந்தால்தான் ஒருவரால் பொதுவுடைமை என்கிற சித்தாந்தத்திற்குள் நுழையமுடியும். அந்த வகையில் சிவ பதத்தை எட்டியவர் நல்லக்கண்ணு.

நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் - விடுதலை 2 வெற்றிமாறன், விஜய் சேதுபதி
ஈரோடு கிழக்கு தொகுதி|சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக நிர்வாகி; கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்!

“நிறைய பேசுபவர் செயலில் ஒன்றும் இருக்காது”

அன்பே இல்லாமல் யாருக்கும் புரியோஜனம் இல்லாமல் ஒரு கும்பல் அலைந்துகொண்டு இருக்கிறது.

போராட்டம் என்கிற பெயரில் போட்டோஷூட் நடத்துகிறார்கள். இது ஒரு அவலம்.

நல்லக்கண்ணு தனது வாழ்க்கையில் நடத்தியதுதான் உண்மையான போராட்டம். இன்று வாய்ச்சொல் வீரர்கள் அதிகமாகி விட்டார்கள். நிறைய பேசுபவர் செயலில் ஒன்றும் இருக்காது. மக்களும் அவர்கள் பின்னால் சென்று ஏமாற்றம் அடைந்து திரும்புகிறார்கள். தேவையான இடங்களில் பேச வேண்டும். பேச்சு தேவை இல்லாத இடங்களில் செயலில் இறங்க வேண்டும். அதற்கு சிறந்த உதாரணம் தோழர் நல்லக்கண்ணு.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்புதிய தலைமுறை

“3 தேர்தலில் தோற்றாலும்...”

3 தேர்தலில் தோற்றவர் என சில குதற்கவாதிகள் நல்லக்கண்ணுவை குறிப்பிடுவார்கள். நல்லவர்களை சிறப்பாக நடத்தக்கூடாது.. தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.

எவ்வளவு பேர் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிட்டார்கள். ஆனால் யார் யார் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது? ஆனால், 3 தேர்தலில் தோற்ற.. இந்த மக்களால் தேர்தெடுக்கப்படாத நல்லக்கண்ணுவை நம் அனைவருக்கும் தெரியும்.

தேர்தலில் வெற்றி பெறுவது வேறு.. பொதுத்தளத்தில் செயல்பாடு என்பது வேறு. இதையேதான் நல்லக்கண்ணுவும் கூறியுள்ளார். எம்.பி., எம்.எல்.ஏ. பதவி முக்கியமில்லை. மக்களுக்காக வாழ வேண்டும் என்பதற்கான உதாரணமாக நல்லக்கண்ணுவை பார்க்கிறோம். அவர் தேர்தலில் தோற்றது அவரின் இழப்பு இல்லை. நம் இழப்பு.

“பொதுவுடைமை தத்துவத்திற்கான இலக்கணம், நல்லக்கண்ணுவின் வாழ்க்கை”

எந்த எண்ணத்தில் பொதுவாழ்க்கையில் நுழைந்தாரோ... 100 வயதாகியும் அதே எண்ண நிலையில் இருக்கிறார். சம்பாதிக்கும் தளம் இது இல்லை. அதற்கு வேறு இடம் உள்ளது. இது சேவை. மக்களுக்கான வேலைக்காரணாக இருக்க வேண்டும். மக்களுக்கான வேலைக்காரனாக இருக்க முடியாது என்றால் பொதுவாழ்க்கைக்கு வரவேண்டாம்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்புதிய தலைமுறை

நல்லக்கண்ணுவிக்கு பணத்தை பார்த்தாலே அலெர்ஜி ஆகிவிடுகிறது. அரசு, கட்சி, தனிப்பட்ட மனிதன் என யார் பணம் கொடுத்தாலும் அதை பிரித்து கொடுத்துவிடுகிறார். ராமகிருஷ்ண பரமகம்சர் மீது பணம் போட்டல் வலியால் துடிப்பார் என்பார்கள். அது போல் நம் கண் முன்னே வாழும் ராமகிருஷ்ண பரமகம்சர் நல்லக்கண்ணு. இதற்கு காரணம் என்ன என்று கேட்டால், என் தத்துவம்தான் என்று கூறிவிடுவார். பொதுவுடைமை தத்துவத்திற்கான இலக்கணமாக நல்லக்கண்ணுவின் வாழ்க்கை உள்ளது.

விடுதலை 2 - “எனக்கு முரண்பாடு உள்ளது”

விடுதலை 2 படம் குறித்து நான் விமர்சனம் எழுதி இருந்தேன். அப்படத்தில் ‘தலைவர் முக்கியமில்லை.. தத்துவமே முக்கியம்’ என்றொரு வசனம் வரும். அதில் எனக்கு முரண்பாடு உள்ளது. கோர்பட்சே வரும்பொழுது தத்துவம் என்ன ஆனது?
நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் - விடுதலை 2 வெற்றிமாறன், விஜய் சேதுபதி
Viduthalai 2 |தகவலுக்கும் உண்மைக்குமான வேறுபாட்டை முன்வைக்கிறதா விடுதலை 2..?

“தலைவரும் முக்கியம்!”

அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடித்த பிறகு அது இந்த நாட்டிற்கு சரியானதாக இருக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அம்பேத்கர், ‘நல்லவர்கள் இருந்தால் அது சரியாக இருக்கும்.. கெட்டவர்களிடம் இருந்தால் அது சரியானதாக இருக்காது.. அரசியலமைப்புச் சட்டம் யார் கையில் போய் சேர்கிறது என்பதை பொருத்தே அது தீர்மானிக்கப்படும்’ என்று கூறினார். அது போலதான் தத்துவம் யாரிடம் உள்ளது எந்த தலைவரிடம் உள்ளது என்பது முக்கியம். அதனால், தோழர் வெற்றிமாறனிடம் இருந்து அந்த கருத்தில் நான் வேறுபடுகிறேன்

விடுதலை திரைப்படம்
விடுதலை திரைப்படம்PT
தத்துவம் நல்லபடியாக செயல்பட வைப்பதற்கு தலைவர் மிகவும் முக்கியம். அதற்கு உதாரணம் 100 வயதை தாண்டி வாழும் நம் தோழர் நல்லக்கண்ணு.

“பாட புத்தகத்தில் நல்லக்கண்ணு பற்றி இருக்க வேண்டும்”

பணம் படைத்த, அதிகாரம் படைத்த மனிதர்களுக்கு மட்டும்தான் சிஸ்டம் சீக்கிரமாக செயல்படுகிறது. கடைநிலை மனிதருக்கு இழுத்து போட்டு தூங்குகிறது.. அதில் சட்டத்துறையும் ஒன்று. அப்படியான நிலையில், நல்லக்கண்ணு போன்ற தலைவர்களை இளைஞர்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும். இவரைப்பற்றி பாட புத்தகத்தில் எழுத வேண்டும். யார் யாரைப் பற்றியோ எல்லாம் பாடபுத்தகத்தில் எழுதிகிறார்கள். இவரைப்பற்றியும் எழுதினால்தான் இளைஞர்கள் மத்தியில் இன்னும் பல நல்லக்கண்ணு உருவாகுவார்கள்.

“நல்லக்கண்ணுவின் டி.என்.ஏ.வை அடுத்த சந்ததிக்கு...”

சிலர் சோசியல் மீடியவை பார்த்து அவர்களை ஆளுமைகள் என நினைத்து ஏமாந்து போகிறார்கள். அறிவியல் தொடர்பான நூல்களை படித்து வருவதால்... நல்லக்கண்ணுவின் டி.என்.ஏ.வை எடுத்து வைத்து அதை அடுத்து வரும் சந்ததியினருக்கு செலுத்தி அறிவியல் வளர்ச்சியால் பல நல்லக்கண்ணுக்களை உருவாக்க முடியுமா என்ற சிந்தனை எனக்கு வந்தது.

நல்லக்கண்ணு
நல்லக்கண்ணு

அதே போல் இறந்தவர்களை உயிர்பிக்கும் படியான அறிவியல் வளர்ச்சியையும்.. நோக்கிச் சென்றுக்கொண்டு இருக்கிறது.. நல்லக்கண்ணு காலம் எய்தபின் இவரின் மூளையை எடுத்து வேறு ஒருவருக்கு பொருத்தி இவரை மீட்டெடுக்க முடியுமா? என்ற எண்ணமும் வந்தது. ஆழ்மனதில் இவர் பதிந்துவிட்டதால் இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுகிறது” என்றார்.

நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் - விடுதலை 2 வெற்றிமாறன், விஜய் சேதுபதி
“பெரியாருக்கோ, கலைஞருக்கோ கிடைக்காத வாய்ப்பு..” - மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து முதல்வர் ஸ்டாலின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com