முத்தையா முரளிதரனின் அறியாத பக்கங்கள்...  '800' படத்திற்குத் தயாராகும் விஜய்சேதுபதி

முத்தையா முரளிதரனின் அறியாத பக்கங்கள்... '800' படத்திற்குத் தயாராகும் விஜய்சேதுபதி

முத்தையா முரளிதரனின் அறியாத பக்கங்கள்... '800' படத்திற்குத் தயாராகும் விஜய்சேதுபதி
Published on

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கவனமெல்லாம் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையில் நடிப்பது பற்றியதாகத்தான் இருக்கிறது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவர் வீழ்த்திய மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் 800 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்திற்கான முன் தயாரிப்புகளுக்காக ஊரடங்கு நாட்களைப் பயன்படுத்தி வருகிறார் விஜய்சேதுபதி.

முரளிதரனின் கிரிக்கெட் ஸ்டைலை கற்றுக்கொள்ளும் விதமாக அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம். ஆனால் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எம்எஸ். ஸ்ரீபதி இயக்கும்  இந்தப் படத்தில் பொதுவெளியில் நாம் அறியாத கிரிக்கெட் வீரர் முரளிதரனின் சுவாரசியமான வாழ்க்கைப் பக்கங்களைப் பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் நுழைவதற்கு முன்பான அவருடைய இளமைக்கால வாழ்க்கையும் படமாக உருவாகிறது என்கிறார்கள்.  எனவே கிரிக்கெட் பிரியர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் விஜய் சேதுபதியின் '800' படம் ஒரு விருந்தாக இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com