உதயநிதி - ஃபகத் பாசில் இணையும் அடுத்த படத்தின் பெயர் இதுதான்... வெளியிட்டது படக்குழு!

உதயநிதி - ஃபகத் பாசில் இணையும் அடுத்த படத்தின் பெயர் இதுதான்... வெளியிட்டது படக்குழு!
உதயநிதி - ஃபகத் பாசில் இணையும் அடுத்த படத்தின் பெயர் இதுதான்... வெளியிட்டது படக்குழு!

உதயநிதியுடன் இயக்குநர் மாரிசெல்வராஜ் இணையும் புதிய படத்தின் பெயர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தற்போது தமிழில் `விக்ரம்’ படத்திலும், தெலுங்கில் `புஷ்பா 2’ படத்திலும் நடித்து இணைநடிகராக நடித்து வருகிறார்.

இவர்களுடன் படத்தில், நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்துக்கு, `மாமன்னன்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. மாமண்ணன் படம் குறித்து மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளபக்கத்தில் “எனது மூன்றாவது படைப்பு இது. நன்றியும் அன்பும் ஏ.ஆர்.ரஹ்மார் சார், உதயநிதி ஸ்டாலின் சார்” என்று குறிப்பிட்டு, சகநடிகர்களை டேக் செய்திருக்கிறார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில் படம் தயாராகிரது. சண்டை காட்சிகளை திலீப் சுப்ராயன் இயக்குகிறார். நடனத்தை மாஸ்டர் சாண்டி ஒருங்கிணைக்க, பாடல்கள் யுகபாரதியின் வரிகளில் வரவுள்ளன என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com