\
Two Mega Films, One Day! Prabhas’ Spirit Vs Yash’s Ramayana 2
Spirit & Ramayana 2Instagram

ஒரே நாளில் 2 பிரம்மாண்ட படங்கள்! பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ Vs யாஷின் ‘ராமாயணா 2’

‘ஸ்பிரிட்’ Vs ‘ராமாயணா 2’: ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வெளியீட்டு தேதி.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அனிமல்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்ததாக பிரபாஸை வைத்து ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2027 தீபாவளிக்கு பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படமும், ரன்பீர் கபூர் – யாஷ் நடிப்பில் உருவாகும் ‘ராமாயணா: பாகம் 2’ படமும் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, ‘ஸ்பிரிட்’ திரைப்படம் 2027 மார்ச் 5-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, 2027 அக்டோபர் 29-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளார்.

Spirit
Spirit Instagram

டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பெரும் பொருட்செலவில் ஸ்பிரிட் படத்தை உருவாக்கி வருகின்றனர். இதில், கடமைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே போராடும் காவல்துறை அதிகாரியாகப் பிரபாஸ் நடிக்கிறார். திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். விவேக் ஓபராய், ஐஸ்வர்யா தேசாய் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா: பாகம் 2’ படத்தில் ரன்பீர் கபூர், யாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துடன் ‘ஸ்பிரிட்’ மோதுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Ramayana part 2
Ramayana part 2Instagram

‘அனிமல்’ திரைப்படம் உலகளவில் ரூ.900 கோடிக்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படும் நிலையில், ‘ஸ்பிரிட்’ படமும் பெரிய வசூல் சாதனை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2027 தீபாவளி வெளியீட்டில் எந்தப் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வசூலில் முன்னிலை பெறும் என்பது திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two Mega Films, One Day! Prabhas’ Spirit Vs Yash’s Ramayana 2
”திரையரங்குகள் அதிர்கின்றன” - ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற நெல்சன், அனிருத்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com