tourist family movie director abishan jeevinth married with girl friend
abishan jeevinth, akilax page

அன்று மேடையில் சர்ப்ரைஸ்.. சொன்னபடி இன்று காதலியை கரம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரான அபிஷன் ஜீவின்ந்த், தனது நீண்டநாள் காதலியான அகிலாவை இன்று கரம்பிடித்தார்.
Published on
Summary

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரான அபிஷன் ஜீவின்ந்த், தனது நீண்டநாள் காதலியான அகிலாவை இன்று கரம்பிடித்தார்.

நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்கள் பற்றிய கதையே, இந்த ’டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின்போது, அவரது பெண் தோழியிடம் "வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொள்கிறாயா?" எனக் கேட்டிருந்தார். அவரும், சற்றே அதிர்ச்சி கலந்த புன்னகையில் வெட்கப்பட்டார். பின்னர், அந்தப் பெண் தோழி குறித்து இயக்குநர் அபிஷன் உரையாற்றினார்.

tourist family movie director abishan jeevinth married with girl friend
abishan jeevinth, akilax page

இந்த நிலையில், தனது நீண்டநாள் காதலியான அகிலாவை, அபிஷன் ஜீவின்ந்த் இன்று கரம்பிடித்தார். சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். புதுமண தம்பதிகளான அபிஷன் ஜீவின்ந்த் - அகிலாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, மணமகன் அபிஷன் ஜீவின்ந்துக்கு திருமணப் பரிசாக தயாரிப்பாளர் மகேஷ் ராஸ் BMW காரை பரிசளித்திருந்தார். அபிஷன் ஜீவின்ந்த் தற்போது இவருடைய தயாரிப்பில்தான் அடுத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடித்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அபிஷன் ஜீவின்ந்திடம் உதவி இயக்குநராக இருந்த மதன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

tourist family movie director abishan jeevinth married with girl friend
”கல்யாணம் பண்ணிக்கலாமா..!” - மேடையிலேயே காதலிக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com