”கல்யாணம் பண்ணிக்கலாமா..!” - மேடையிலேயே காதலிக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்!
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கத்தில், நடிகர்கள் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் குடும்ப திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்துடன் திரையரங்கில் மோதவிருக்கிறது.
காதலிக்கு மேடையிலேயே சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்..
திரைப்படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டு டூரிஸ்ட் ஃபேமிலி பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட கலைஞர்கள் பலபேர் கலந்துகொண்ட நிலையில், முதல் திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி இயக்குநராக அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் அபிஷான் ஜீவின்ந்த் பேசினார்.
அப்போது பேசிய அவர் தன்னுடைய கடினமான நேரங்களில் உருதுணையாக இருந்த தன்னுடைய காதலிக்கு மேடையிலேயே ’அக்டோபர் 31-ம் தேதி என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா’ என மேர்ரேஜ் புரொபோசல் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவருக்கு முன்னதாக பேசிய குட் நைட் திரைப்பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், “குட் நைட் பட கதை யாருக்கும் பிடிக்கவில்லை. அதை எப்படி எடுப்பது என்ற கவலையுடன் பீச்சில் அழுத போது, யாரும் செய்யவில்லை என்றால், நாமே செய்யலாம் என்றான் என் அண்ணன் யுவராஜ். மறுநாள் காலையில் நாமளே செய்யலாம் என வீட்டை அடமானம் வைத்துவிட்டு வந்தார். அதை என்னிடம் சொன்னால் கவலை படுவேன் என படம் முடியும் வரை சொல்லவே இல்லை. படம் வெற்றியடைந்த பின் இதே போல் பலருக்கும் செய்ய வேண்டும் என சொன்னார். அதை தான் லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என செய்திருக்கிறார். அடுத்து ஒன்ஸ் மோர், ஹேப்பி எண்டிங் படங்களும் வர இருக்கிறது. ஒரு சிறிய விதை, ஆலமரமாக வந்திருக்கிறது, அந்த ஆலமரம் ஒரு காடாய் மாறி இங்கு ஒரு நல்ல சூழலை உருவாகும் என எதிர்பார்க்கிறேன்" என்று பேசினார்.