விருது வாங்கிய விஜய் சேதுபதி, புஷ்பா அல்லு அர்ஜூன்
விருது வாங்கிய விஜய் சேதுபதி, புஷ்பா அல்லு அர்ஜூன்pt web

Top10 சினிமா செய்திகள் | 'விடுதலை 2' பட நீளம் குறைப்பு! முதல் புஷ்பா2 வசூல் நிலவரம் வரை

இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இந்தப் பகுதியில் பார்க்கலாம்
Published on

'விடுதலை 2' பட நீளம் குறைப்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2 டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் மொத்த நீளம் 2 மணிநேரம் 52 நிமிடங்களாக இருந்த நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பே 8 நிமிடங்களை குறைத்துள்ளனர்.

கோதண்டராமன் மறைவு

சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கோதண்டராமன் (65) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்

விருது வாங்கிய விஜய் சேதுபதி, புஷ்பா அல்லு அர்ஜூன்
Top 10 உலகம்: ராணுவ வீரர்களை அதிகரிக்கும் ஜெர்மனி To அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் குவிந்த அகதிகள்!

இனி சர் கிறிஸ்டோபர் நோலன்..!

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ் இருவரும் சினிமாத்துறைக்கு அளித்த பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக சர் மற்றும் தமே பட்டங்களை வழங்கினார் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்.

`விடுதலை-2' சிறப்புக்காட்சிக்கு அனுமதி

விடுதலை 2 - சிறப்புக் காட்சிக்கு அனுமதி
விடுதலை 2 - சிறப்புக் காட்சிக்கு அனுமதி

`விடுதலை-2' திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு நாளை திரையரங்குகளில் தமிழக அரசு அனுமதி

நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி

இதையடுத்து, தமிழக அரசுக்கு நடிகர் விஜய் சேதுபதி மிக்க நன்றி என பேட்டி.

விருது வாங்கிய விஜய் சேதுபதி, புஷ்பா அல்லு அர்ஜூன்
அதிமுக - பாஜக கூட்டணி? என்ன நடக்கலாம்? யாருக்கு லாபம்? எங்கு சிக்கல்? முழு அலசல்

இயக்குனர் - சங்கர் தயாள் மரணம்

சகுனி திரைப்பட இயக்குநர் காலமானார்
சகுனி திரைப்பட இயக்குநர் காலமானார்

சகுனி, குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் இயக்குனர் - சங்கர் தயாள் காலமானார்.

விஜய் சேதுபதிக்கு விருது

சென்னையில் நடைபெற்ற International Film Festival நிறைவு நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை ‘மகாராஜா’ படத்துக்காக பெற்றார் விஜய் சேதுபதி. சிறந்த நடிகை விருதை ‘அமரன்’ படத்துக்காக நடிகை சாய் பல்லவி பெற்றார். சிறந்த துணை நடிகர் விருது லப்பர் பந்து படத்துக்காக தினேஷிற்கும், சிறந்த துணை நடிகை விருது வேட்டையன் படத்துக்காக துஷாராவிற்கும் கிடைத்தது.

விருது வாங்கிய விஜய் சேதுபதி, புஷ்பா அல்லு அர்ஜூன்
Top 10 Sports | தாயகம் திரும்பிய அஸ்வின்.. பிபா விருதைப் பெற்ற முதல் பிரேசில் வீரர்!

பாகம்2 வேண்டுமா? வேண்டாமா?

சினிமா மீதான ஞானம் இல்லாதவர்கள், சினிமாவை தெரியாதவர்கள் தான் பாகம் 2யை தேவையில்லை என சொல்வார்கள் என இயக்குநர் சீனுராமசாமி புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டி

’அலங்கு’ படம் குறித்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பதிவு

“அலங்கு திரைப்படம் பார்த்தேன். மிகவும் உணர்வுப்பூர்வமான வாழ்வியல் சார்ந்த கதை, ஆதலால் அதுவே நம்மை அந்த களத்திற்குள் எளிதில் அழைத்து சென்றுவிட்டது. இயக்குநர் S.P.சக்திவேல் அவர்களின் நேர்த்தியான திரைக்கதையும், கதைமாந்தர்களின் தேர்வும் அவர்களது இயல்பான நடிப்பும் இப்படத்திற்கு மேலும் வலுவூட்டியிருக்கிறது” - இயக்குநர் அருண்ராஜா காமராஜ்

விருது வாங்கிய விஜய் சேதுபதி, புஷ்பா அல்லு அர்ஜூன்
சென்னை: தனியார் வங்கி வளாகத்திலேயே அதிகாரிக்கு சரமாரி கத்திக்குத்து... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!

புஷ்பா2 வசூல் நிலவரம்

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வணங்கான் இசை வெளியீட்டு விழா

பாலா - அருண்விஜய்யின் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதே விழாவில் இயக்குனர் பாலாவின் திரையுலக பயணம் 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடப்பட்டதால், விழாவில் திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டனர்.

அந்த புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும், வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், “விழாவிற்கு பௌர்ணமி வெளிச்சம் பசிய நடிகர் திருமிகு வெக்குமார், அண்ணன் சீமான், திரு சூர்யா, இரு சிவகார்த்திகேயன், இயக்குநர் திரு. மணிரத்னம் இயக்குநர் விக்ரமன், இயக்குநர் திரு கே பாக்கியராஜ் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றுள்ளார் அவர்.

விருது வாங்கிய விஜய் சேதுபதி, புஷ்பா அல்லு அர்ஜூன்
“ராகுல் காந்தியால் அசௌகரியமாக உணர்ந்தேன்” - மாநிலங்களவைத் தலைவரிடம் பாஜக பெண் எம்.பி. புகார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com