“நெருக்கடியில்தான் மனிதனின் முகம் தெரியும்”- ரியல் ஹீரோ சோனு சூட் பிறந்த நாள் இன்று!

“நெருக்கடியில்தான் மனிதனின் முகம் தெரியும்”- ரியல் ஹீரோ சோனு சூட் பிறந்த நாள் இன்று!
“நெருக்கடியில்தான் மனிதனின் முகம் தெரியும்”- ரியல் ஹீரோ சோனு சூட் பிறந்த நாள் இன்று!

கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சோனு சூட், அவரது 47-வது பிறந்தநாள் இன்று. நெருக்கடிகள்தான் மனிதர்களின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டு காட்டும். அதைப்போல திரைப்படங்களில் வில்லனாக அறியப்பட்ட சோனு சூட்டை ரியல் ஹீரோவாக வெளிச்சமிட்டு காட்டியது கொரோனா.

கொரோனா பொதுமுடக்கத்தினால் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டு ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்தே ஊர் செல்லும் கொடுமையும் நடந்தது. இதனை அறிந்த சோனு சூட், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை தனது சொந்த செலவில் பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலமாக அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு சேர்க்க உதவி செய்தார். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவார்கள். இதுமட்டுமில்லாமல் ட்விட்டர் வழியாக தன்னிடம் உதவி கோரும் பலருக்கும் உதவி செய்து வருகிறார் இவர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலையிழந்த ஹைதராபாத்தை சேர்ந்த சாரதா என்பவர், காய்கறி விற்கும் வேலை செய்துவந்தார். சமூக வலைதளங்கள் வாயிலாக இதனை அறிந்த சோனுசூட் இவருக்கு பணிநியமன ஆணை வழங்கி ஆச்சர்யப்படுத்தினார். அதுபோல ஆந்திராவில் வறுமை காரணமாக மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை பூட்டி வயலை உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தார் இவர்.

இப்படி ரியல் ஹீரோவாக அசத்தி வரும் சோனு சூட், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை சோடியல் மீடியா மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com