\
ajith kumar - thiruppur subramaniam
ajith kumar - thiruppur subramaniamanirudh reception / interview screenshot

’அஜித் விரைவில் காணாம போய்டுவார்..’ இனி யாரும் படம்பண்ண வரமாட்டாங்க! திருப்பூர் சுப்ரமணியம் காட்டம்!

பட புரொமோஷன்களில் கலந்துகொள்ள மாட்டாங்க, ஆனால் அவர்களுடைய சொந்த வேலைக்காக மட்டும் விளம்பரங்களில் நடிப்பாங்க என அஜித், நயன்தாராவை வெளிப்படையாக விமர்சித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.
Published on: 
Summary

திருப்பூர் சுப்ரமணியம், அஜித் மற்றும் நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்கள் பட புரொமோஷன்களில் கலந்துகொள்ளாததை கடுமையாக விமர்சித்துள்ளார். இது அவர்களின் மார்க்கெட்டை பாதிக்கக்கூடும் என்றும், சினிமாவில் இருந்து காணாமல் போகும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துவரும் நடிகர் அஜித் குமார், தனக்கென ஒரு சினிமா பாணியையும், மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தபோதிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது திரைப்படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் ஊடகப் பேட்டிகளில் கலந்துகொள்வதை முற்றிலுமாகத் தவிர்த்து வருகிறார் அஜித். இதற்கு முதலில் மேடைகளில் அவர் பேசுவது தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது என்ற காரணம் சொல்லப்பட்டாலும், நாளுக்கு நாள் அஜித் புரொமோஷன்களில் கலந்துகொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளானது. அஜித் போன்ற பெரிய நடிகர் புரொமோஷன்களில் கலந்து கொண்டால், அது தயாரிப்பாளர்களுக்குப் பெரிய உதவியாகவும் படத்திற்குக் கூடுதல் பலமாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனாலும அவர் படத்தின் புரொமோஷன்களில் கலந்துகொள்வதை தற்போதுவரை தவிர்த்து வருகிறார்.

அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்

இந்தசூழலில் தான் அவருடைய ரேஸிங் கம்பெனிக்கான விளம்பரங்களில் அடுத்தடுத்து அஜித் நடித்துவரும் நிலையில், உங்களுடைய சொந்தப் பணம், சொந்த வேலை என்றால் விளம்பரங்களில் நடிக்கிறீர்கள், ஆனால் உங்களை வைத்து கோடிகளில் பணம்போட்டு படம்செய்யும் தயாரிப்பாளருக்காக புரொமோஷன்களில் கலந்துகொள்ள முடியவில்லையா என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் பட புரொமோஷன்களில் அஜித், நயன்தாரா போன்றவர்கள் கலந்துகொள்வதில்லையே என்ற கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் திரையரங்கு உரிமையாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம்.

ajith kumar - thiruppur subramaniam
‘என்னால் வெளிவர முடியவில்லை..’ மகாராஜாவை பார்த்து மிரண்ட டாம் ஹேங்க்ஸ்!

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், “இதை நீண்ட நாட்களாக சொல்லி வருகிறேன், எந்த நடிகராக இருந்தாலும், ஏன் உலகப் புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும் கூட தங்களுடைய பட புரொமோஷன்களில் கலந்துகொள்கின்றனர். இந்த அஜித் ஒருவர், நயன்தாரா ஒருவர், இவங்க ரெண்டுபேரும் தான் தங்களுக்கு ஏதோ பெரிய கிரீடம்னு நினைச்சுக்கிறாங்க. நாம புரொமோஷன்களில் கலந்துகொள்ளவில்லை என்றால் அது கெத்து என நினைத்துக்கொள்கிறார்கள். அது கெத்து கிடையாது, உங்களுடைய மார்க்கெட்டை கீழே கொண்டுபோய்டும். இதை அவர்களே விரைவில் தெரிந்துகொள்வார்கள். அவர்கள் இப்படியே இருந்துகொள்ளட்டும், வரவில்லை என்றால் அவர்களே காணாமல் போய்விடுவார்கள். அதுதான் நடக்கப்போகுது. இந்த இருவரும் இதை தொடர்ந்து செய்வதை நான் ஆரம்பித்திலிருந்தே விமர்சனம் செய்திருக்கிறேன். 100 கோடி, 150 கோடிணு சம்பளம் மட்டும் வாங்க தெரியுது, ஆனால் அந்தப் படங்களின் புரொமோஷன்களில் கலந்துகொண்டு அந்த தயாரிப்பாளருக்கு நல்லபடியா பண்ணிக்கொடுக்கலாம் என்ற எண்ணமே இவர்களுக்கு கிடையாது.

ஆனால் தன்னுடைய சொந்த வேலை என்றால் மட்டும் இவர்கள் தானாக புரொமோஷன்களில் கலந்துகொள்கின்றனர். நயன்தாரா சொந்தப்படம் பண்ணும்போது புரொமோஷனில் போய் நின்னாங்க, அஜித்தும் பூஜைக்கு போகவில்லை என்றாலும் டேர் டெவில் புரொமோஷனுக்கு கண்டிப்பா வந்து நிற்பாரு. அவரால் கார் விளம்பரத்திலும், பிஸ்கெட் விளம்பரத்திலும் நடிக்க முடியுது, ஆனால் படத்தின் புரொமோஷனுக்கு மட்டும் வர முடியாது. அவர் பெரிய ஹீரோ தானே, புரொமோஷன்களுக்கு வரமுடியாது என்று சொன்னவர் தானே, தற்போது யாராவது அவரை வைத்து படம் செய்ய முன்வந்தார்களா? சொந்தப்படம் தானே அவரால் தற்போது செய்ய முடியுது. இனி இப்படி தான் நடக்கும். சினிமாவிலிருந்து கண்டிப்பாக காணாமல் போய்விடுவார்கள்” என காட்டமாக பதிலளித்துள்ளார். அவருடைய இந்த பதில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ajith kumar - thiruppur subramaniam
‘சாய்பல்லவிய என்னயா பண்ணி வச்சிருக்கீங்க..’ ட்ரோல் செய்யப்படும் INJI VELLAM கெட்டப்!