\
சாய் பல்லவி
சாய் பல்லவிaachi aachi song screenshot

‘சாய்பல்லவிய என்னயா பண்ணி வச்சிருக்கீங்க..’ ட்ரோல் செய்யப்படும் INJI VELLAM கெட்டப்!

மணிரத்னம் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்துவரும் இஞ்சி வெல்லம் படத்தின் ஆச்சி ஆச்சி பாடல் வெளியாகியிருக்கும் நிலையில், அதில் சாய் பல்லவியின் கெட்டப் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
Published on: 
Summary

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இஞ்சி வெல்லம்' படத்தின் 'ஆச்சி ஆச்சி' பாடல் வெளியானது. சாய் பல்லவியின் வித்தியாசமான தோற்றம் மற்றும் ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை சந்தித்துள்ளது. பலரும் அவரது தோற்றம் நன்றாக இல்லை எனவும், பாடலுக்கும் பொருத்தமாக இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இஞ்சி வெல்லம்'. இப்படத்தின் முதல் பாடலான 'ஆச்சி ஆச்சி' நவம்பர் 25ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், வைஷாலி சாமந்த் மற்றும் ஷரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர். தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் கலவையில் உருவாகியுள்ள இந்தப் பாடல், ஒரு பெண்ணின் காதல் வாழ்க்கை மற்றும் தாய்மையை கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.

500 Jewels, 18 Months, 3 Kingdoms: Ramayana's Grand Designs
Sai PallaviRamayana Trailer you tube Screenshot

இப்பாடலுக்கு பரவலான வரவேற்பு கிடைத்து வரும் அதேசமயம், பாடலில் சாய் பல்லவியின் வித்தியாசமான தோற்றம் மற்றும் நடனக் காட்சிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, சாய் பல்லவியின் பாய் கட் ஹேர்ஸ்டைல் பேசு பொருளாகியுள்ளது. சில தினங்கள் முன்பு வெளியான OM படத்தில் காவலதிகாரியாக நடித்திருந்த சாய் பல்லவி, ஷார்ட் ஹேர் வைத்து தான் நடித்திருந்தார். அதில் அவரது நடிப்புக்காக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள 'ஆச்சி ஆச்சி' பாடலில் சாய் பல்லவியின் ஹேர் ஸ்டைல் அத்தனை பொருத்தமாக இல்லை என பலரும் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதே சாய் பல்லவி சில மாதங்கள் முன்னர் ராமாயணா படத்தில் சீதையாக நடித்ததற்கு பலத்த விமர்சனங்களை சந்தித்தார். பல சினிமா நட்சத்திரங்களும் சாய் பல்லவி சீதை வேடத்தில் பொருத்தமாக இல்லை என கருத்து தெரிவித்திருந்தனர். பிரபல பாலிவுட் நடிகையும், நடிகை கஜோல் தங்கையான தனிஷா முகெர்ஜி தனது எக்ஸ் தள பதிவில் சாய் பல்லவி திறமையான நடிகை என்றாலும், சீதா பாத்திரத்துக்கு பொருத்தமாக இல்லை என குறிப்பிட்டிருந்தார். அப்பதிவிட்ட அடுத்த நாளே 'ஆச்சி ஆச்சி' பாடல் வெளியாகி இந்த மாதிரியான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

தொடர்ச்சியாக வெவ்வேறு விஷயங்களுக்காக சாய் பல்லவி விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஆனால் இது குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் கூறவில்லை. இப்போது பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவே உருவாகியுள்ள `இஞ்சி வெல்லம்' படத்தின் முதல் பாடலுக்கே இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளது பேசு பொருளாகி இருக்கிறது.