யப்பா... இது கரடுமுரடான படம்: அமிதாப் பச்சன் விமர்சனம்!

யப்பா... இது கரடுமுரடான படம்: அமிதாப் பச்சன் விமர்சனம்!

யப்பா... இது கரடுமுரடான படம்: அமிதாப் பச்சன் விமர்சனம்!
Published on

அமிதாப்பச்சன் நடித்து 2018-இல் வெளிவர இருக்கும் வரும் ”தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தான்” (Thugs of Hindostan) திரைப்படம் கரடு முரடானது என தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் விமர்சனம் செய்துள்ளார்.

1839-ஆம் ஆண்டு வெளியான கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ தக் (Confessions of a thug) என்ற நாவலை தழுவி எடுக்கப்படும் படம் தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தான். 2018 தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. யஷ் ராஜ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சனும், அமிர்கானும் முதல் முறையாக சேர்ந்து நடிக்கின்றனர். மேலும் கத்ரீனா கைஃப், ஃபாத்திமா சனா ஷேக் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்குகிறார்.

படப்பிடிப்பிலிருந்து திரும்பிய அமிதாப், தனது ட்விட்டர் பக்கத்தில், "தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தான் படப்பிடிப்பிலிருந்து திரும்பியிருக்கிறேன். கரடு முரடான படம் இது. ஆனால் இவ்வளவு கடினமாக உழைக்காமல் யார் பலனடையமுடியும்?" என பதிவு செய்துள்ளார். அமிதாப் நடிப்பில் 102 நாட் அவுட் என்கிற படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து அமிதாப் பச்சன் ரிஷி கபூருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com