ethirneechal kathir
ethirneechal kathirfile image

முதல் படம் 18+..OK OKல் ஹன்சிகாவுக்கு மாப்பிள்ளை..ஆதி குணசேகரன் தம்பி-யார் இந்த எதிர்நீச்சல் கதிர்?

எதிர்நீச்சலில் கதிர் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்து எதிர்மறை விமர்சனங்களை தூக்கி சுமக்கும் நடிகர் விக்னேஷ், உண்மையில் எப்படி இந்த வாய்ப்பை எட்டிப்பிடித்தார், அவர் யார் என்பதை பார்க்கலாம்.
Published on

தொலைக்காட்சி தொடர்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சீரியல்களில் எதிர்நீச்சலுக்கு முக்கிய இடம் உண்டு. குடும்பத்தில் இருக்கும் பெண்களை அடிமைப்படுத்தி, ஆணாதிக்கத்தை பிரதிபலிக்கும் பாத்திரங்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.‌

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனுக்கு அடுத்த படியாக ரசிகர்களால் வருத்தெடுக்கப்படும் பாத்திரம் தான் கதிர். எதிர்நீச்சலில் ஆதிமுத்து கதிராக எதிர்மறை விமர்சனங்களை பெற்றுவரும் கதிரின் நிஜப்பெயர் விக்னேஷ். ஆனால் இவரை எல்லோரும் விபு என்று தான் அழைப்பார்களாம். ஊட்டியை சொந்த ஊராக கொண்ட இவர் நடிப்பு, பாடல், மாடலிங், என அனைத்திலும் கலக்கி வருகிறார்.

சினிமா வாய்ப்பு தேடி அலைந்த போது 18 + அடல்ட் ஜர்னர் படத்தில் நடித்துள்ளார் விபு. படம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் இடையே ஓரளவுக்கு கவனம் பெற்றார். அதனை தொடர்ந்து ஹன்சிகாவுக்கே மாப்பிள்ளையாக வரும் கேரக்டரில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார் விபு.

ஒன்றுமே தெரியாதபடி வெளிநாட்டு மாப்பிள்ளை ஆக நடித்திருக்கும் அவரது காட்சியை இப்போது பார்த்தாலும் விபுவா இது என்ற கேள்வி எழும். அந்த அளவுக்கு சாதுவாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து அடிமேளம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்; அழகு கல்யாணப் பரிசு, விதி, திகில் ஆகிய சீரியல்களில் நடித்த விபு, தற்போது எதிர்நீச்சல் சீரியலில் கதிராக கலக்கி வருகிறார். சீரியலில் எப்படியோ, நிஜ வாழ்க்கையிலும் இவர் கோவக்காரர்தான் என்கின்றனர் அவரை தெரிந்தவர்கள்.‌ ஒரு பக்கம் எதிர்நீச்சல் கதிரை கொட்டித்தீர்க்கும் ரசிகர்கள் கதிர் - நந்தினி ஜோடி நன்றாகத்தான் இருக்கிறது என்றும் சிலாகிக்க தவறுவதில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com