”இன்னுமா என்ன தெரியல.. Bad Fellow” - மிரட்டும் கூலி படத்தின் புதிய ப்ரோமோ!
தன்னுடைய வித்தியாசமான மேக்கிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து ’விக்ரம்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து, ரஜினியை வைத்து ’கூலி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ஒரு தீவிரமான கமல் ரசிகர் ரஜினியை வைத்து என்னமாதிரியான கலவையை தயார் செய்துள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பே படத்திற்கு ஹைப் ஏற்றி உள்ளது.
ஒரு பக்கம் ரஜினி, லோகேஷ் என்றால் மறுபக்கம் இசையில் தரமான சம்பவங்களை செய்திருக்கிறார் அனிருத். முதலில் டிஆர் வைபில் சிக்கிட்டு பாடல், அதற்கு பூஜா ஹெக்டோவை வைத்து ’மோனிகா’ என்ற பாடல், ரஜினியின் ரசிகர்களுக்கான பவர்ஹவுஸ் பாடல் என 3 பாடல்களும் இணையத்தில் அதிகம் கேட்கப்படும் முனுமுனுக்கப்படும் பாடல்களாக இருக்கின்றன.
இதை அனைத்தையும் தாண்டி ரஜினிக்கு சரிசமமான நடிப்பை நாகர்ஜுனா, சௌபின் சாஹிர் போன்றவர்கள் வெளிப்படுத்தியிருப்பது படத்தை மேலும் தரமானதாக மாற்றியுள்ளது. விக்ரம் படத்தை போல படத்தின் முதல் பாதியை சௌபினும், நாகார்ஜுனாவின் ஆக்கிரமிக்க, இரண்டாம் பாதியை ரஜினி முழுக்க ஆட்கொள்ளப்போகிறார்.
மிரட்டும் புதிய ப்ரோமோ..
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்டு 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஓப்பனாகியிருக்கும் சூழலில், முன்பதிவில் சாதனை படைத்துவருகிறது கூலி. முதலில் கேரளா, தமிழ்நாடு என தொடங்கிய முன்பதிவு தற்போது தெலுங்கானா, ஆந்திரா என தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் படத்திற்கான ரிலீஸிற்கு இன்னும் 2 நாட்களே மீதமிருக்கும் நிலையில், புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தின் ட்ரெய்லரில் பிஜிஎம் எதுவுமே இல்லாமல் அனிருத் பாடியிருந்த நிலையில், புதிய ப்ரோவில் மொரட்டுத்தனமான பிஜிஎம் இடம்பெற்றுள்ளது. மேலும் என்னைய தெரியல, பேட் ஃபெல்லோவ் என ரஜினி பேசும் வசனமும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சிறந்த ஸ்க்ரீன்பிளே படமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், படத்தை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.