ஆக.28ல் தனி ஒருவன் 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு? அடுத்த சித்தார்த் அபிமன்யூ யார்?

ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தனிஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Thani oruvan
Thani oruvanpt web

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார்.

ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி - மோகன் ராஜா கூட்டணியில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் நடிகர் அரவிந்த் சாமிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

மிக குறைவான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் இத்திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அதற்கான இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டே மோகன் ராஜா தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறியிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் முதல் பாகத்தில் ஹீரோ ஜெயம் ரவியை விட எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமி அதிக அளவில் கொண்டாடப்பட்டார். அந்த கேரக்டர் தான் இவ்வளவு சுவாரஸ்யமாக படம் அமைய காரணமாக இருந்தது. ஆனால், சித்தார்த் அபிமன்யூ கேரக்டர் க்ளைமேக்ஸில் இறப்பது போலதான் அமைந்திருக்கும். அதனால், தனி ஒருவர் இரண்டாம் பாகம் எடுப்பது என்றால் அதே அளவிற்கு பலம் வாய்ந்த கேரக்டர் வேண்டும். அரவிந்த் சாமி போன்ற ஒரு ஸ்டார் நடிகரும் இடம்பெற வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்து நிச்சயம் மோகன் ராஜா அறிவிப்பை வெளியிடுவார் என்றே தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com