விரைவில் தளபதி 68 அப்டேட்... வெங்கட்பிரபு சொன்ன தகவல்!

விரைவில் விஜய்யின் 68 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
vijay
vijaypt desk

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் விஜய்யின் 68 ஆவது படம் குறித்த பெயர், பாஸ் என்றும், puzzle எனவும் இணையத்தில் பேசப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பெயர்களுமே இல்லை என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.

vijay
தளபதி 68 பெயர் இதுதானா? அர்ச்சனா கல்பாத்தி சொன்ன செம பதில்!

இந்த நிலையில், ரசிகர்களுக்கு எக்ஸ் வலைத்தளத்தின் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு, விரைவில் விஜய்யின் 68 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு தினத்தில் விஜய் பட அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், தற்போது வெங்கட் பிரபுவின் இந்த அறிவிப்பு அதனை உறுதிப்படுத்தியிருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com