தளபதி 68 பெயர் இதுதானா? அர்ச்சனா கல்பாத்தி சொன்ன செம பதில்!

தளபதி 68 திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது x வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தளபதி 68
தளபதி 68puthiyathalaimurai

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘தளபதி 68’. இப்படத்திற்காக விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வி.டி.வி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே ஒன்றாக இணைந்துள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் தளபதி 68-ல் இத்திரைப்பிரபலங்களோடு நடிகர் ராகவா லாரன்ஸும் இணைகிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பானது இன்று வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது x வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.

அதில் அவர், “தளபதி 68 பாடத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இப்படத்தில் “நான் ஈ” திரைப்படத்தில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப் இணைவதாக அவரே தன் X வலைதள பக்கத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவர், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான தளபதி 68-ல் நானும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி.. இந்த வாய்ப்பிற்கு மிக்க நன்றி வெங்கட்பிரபு சார். தளபதி விஜய் சாருடன் இணைந்து திரையில் நடிப்பது, எனக்கு எப்போதுமே மிகவும் ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே தளபதி 68 படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. படத்தின் பெயர் Boss, Puzzle என சமூகவலைதளவாசிகள் ட்ரெண்ட் செய்து வந்தனர். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி X தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் "Boss, Puzzle எல்லாம் நிச்சயமாக இல்லை. வெங்கட்பிரபு சிறப்பான ஒரு டைட்டிலை தயார் செய்கிறார். நிஜமான தலைப்பு விரைவில்... அதுவரை அமைதி காக்கவும். உங்கள் அன்புக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com