’ஒரு வேள அந்தக் கதையா இருக்குமோ?’ - அன்றே வெங்கட்பிரபு சொன்ன மிரட்டல் ஸ்டோரி! ’GOAT' ஆக மாறிய விஜய்!

வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் first look போஸ்டர் வெளியாகியுள்ளது. திரைப்படத்திற்கு G.O.A.T என பெயரிடப்பட்டுள்ளது.
தளபதி 68, வெங்கட் பிரபு
தளபதி 68, வெங்கட் பிரபுpt web

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தளபதி 68
தளபதி 68puthiyathalaimurai

இதில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் விஜய்யின் 68 ஆவது படம் குறித்த பெயர், பாஸ் என்றும், puzzle எனவும் இணையத்தில் பேசப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பெயர்களுமே இல்லை என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.

ரசிகர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்திருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, விரைவில் தளபதி 68 குறித்தான அப்டேட்கள் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

தளபதி 68 திரைப்படத்தின் first look இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதுகுறித்து தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்திற்கு G.O.A.T Greatest of all time என பெயரிடப்பட்டுள்ளது. first look புகைப்படத்தில் மேலே விமானம் பறந்தபடி இருக்க, விஜய் இரு கதாபாத்திரங்களில் நடந்து வருகிறார். வலதுபுறம் இருக்கும் விஜய் நெடுநாள் தாடியுடனும், இடதுபுறம் இருக்கும் விஜய் இளமையுடனும் இருக்கின்றனர்.

நேர்காணல் ஒன்றில் இயக்குநர் வெங்கட்பிரபு, “யோசித்து பாருங்கள் இளைய தளபதி மாதிரியான ஒரு நடிகர் வேறொரு இடத்தில் சென்று மாட்டிக்கொள்கிறார். ஏலியன் வந்து அவரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது என வைத்துக்கொள்ளுங்களேன், அங்கு என்ன நடக்கும். கிழித்து எடுத்துவிட மாட்டோம். ரசிகர்கள் எல்லாம் எப்படா விஜய் நடிப்பார் என்று தானே எதிர்பார்ப்பார்கள். இங்கு காட்டும் மாஸை அங்கு ஏன் காட்டக்கூடாது” என தெரிவித்திருந்தார்.

Thalapathy68 | TheGreatestOfAllTime
Thalapathy68 | TheGreatestOfAllTime

எனவே, இடதுபுறம் இருக்கும் விஜய் விண்வெளிக்கு செல்லும் முன்பும், வலதுபுறம் இருக்கும் விஜய் விண்வெளியில் இருந்து வந்த பின்னும் இருப்பதுபோன்றே புகைப்படம் உள்ளது. மட்டுமல்லாது பின்னால் பாராசூட் கிடக்கிறது.

புகைப்படத்தின் கீழ் light can devour darkness but darkness cannot consume the light (இருளை ஒளியால் விழுங்க முடியும் ஆனால் இருளால் ஒளியை கிரகிக்க முடியாது) என குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை இப்பொழுதே ரசிகர்கள் விவாதிக்க தொடங்கிவிட்டார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com