தளபதி 68 first look.. அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

தளபதி 68 திரைப்படத்தின் first look இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தளபதி 68
தளபதி 68puthiyathalaimurai

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

vijay
vijaypt desk

இதில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் விஜய்யின் 68 ஆவது படம் குறித்த பெயர், பாஸ் என்றும், puzzle எனவும் இணையத்தில் பேசப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பெயர்களுமே இல்லை என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.

தளபதி 68
தளபதி 68x வலைதளம்

ரசிகர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்திருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, விரைவில் தளபதி 68 குறித்தான அப்டேட்கள் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தளபதி 68 திரைப்படத்தின் first look இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு புகைப்படத்தில் ஆள் அரவமற்ற பெரும் பாலைவனம் போன்ற சமவெளிப்பகுதியில், பறக்கும் விமானத்தின் நிழல் மட்டும் தெரிகிறது. போஸ்டரில் lands today 6pm என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com